சசிகுமாரும் டவுன் பஸ்சும் ஒண்ணா எசமான்?
சசிகுமாரும் டவுன் பஸ்சும் ஒண்ணுபோல. வந்தா அடுத்தடுத்து வந்துகிட்டே இருக்கும்; இல்லாட்டி காத்துக்கிட்டே இருக்கணும். ரொம்ப நாள் கழிச்சு இப்போதான் சசிகுமார் நடிச்ச ‘நான் மிருகமாய் மாற’ படம் ரிலீஸ் ஆகியிருக்கு. அதுக்குள்ள அடுத்த வாரம் மறுபடியும் சசிகுமார் நடித்துள்ள ‘காரி’ படம் ரிலீஸ் ஆகுதுங்க.
காமெடி, சென்டிமென்ட், ஆக்ஷன் என அனைத்து தரப்பு ரசிகர்களுக்குமான படங்களில் நடித்துவரும் நடிகர் சசிகுமார் தற்போது நடித்துள்ள படம் ‘காரி’.
சசிகுமாரின் படங்களில் என்னென்ன கமர்ஷியல் அம்சங்கள் எல்லாம் இருக்குமோ அனைத்தும் கலந்த அதிரடி ஆக்ஷன் படமாக ‘காரி’ உருவாகியுள்ளது. ‘சர்தார்’ படத்தை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் S.லக்ஷ்மண் குமார் தயாரித்துள்ள ‘காரி’ திரைப்படம் நவ-25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
அறிமுக இயக்குநர் ஹேமந்த் இயக்கியுள்ளார். படத்தின் கதாநாயகியாக புதிய வரவான மலையாள நடிகை பார்வதி அருண் நடித்துள்ளார். சசிகுமாருடன் மோதும் வில்லனாக நடிகர் ஜேடி சக்கரவர்த்தி நடித்துள்ளார்.
முக்கிய வேடங்களில் ரெடின் கிங்ஸ்லி, ஆடுகளம் நரேன், இயக்குநர் பாலாஜி சக்திவேல்,
நாகி நீடு, பிரேம் குமார் , பிக்பாஸ் புகழ் சம்யுக்தா, அம்மு அபிராமி, ராம்குமார், தேனி முருகன் மற்றும் பலர் நடித்துள்ளனர். எல்லை தெய்வமான காரியின் பெயரில் உருவாகியுள்ள இந்த படத்தின் டிரைலர் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.