தெலுங்கு சினிமா

‘எது நிஜம் என் கண்மணி’ வீடியோ ஆல்பம்

தமிழில் இப்போது வீடியோ ஆல்பம் முயற்சிகள் பரவலாக நடந்து வருகின்றன. அப்படி ஒரு முயற்சியாக உருவாக்கப்பட்டுள்ள பாடல்தான் ‘எது நிஜம் என் கண்மணி’. இந்த ஆல்பம் பாடலை விவேக் கைப்பா பட்டாபிராம் இயக்கியுள்ளார்.

இதில் டோலிவுட் பிரபலமான விஸ்வந்த் டுடும்புடி நாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக மேகலை மீனாட்சி நடித்துள்ளார்.மேலும் மும்பை மாடல் அழகிகளும் நடித்துள்ளார்கள் .தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகி இருக்கும் இந்த ஆல்பத்திற்கு சுபாஷ் ஆனந்த் இசை அமைத்துள்ளார் . இயக்குனர் எஸ். பி. ஹோசிமின் பாடல் எழுத, ஒளிப்பதிவு செய்துள்ளனர் பிரசன்ன குமார் மற்றும் வினோத்குமார் எஸ் . அருண்குமார் படத்தொகுப்பு செய்துள்ளார்.டி.சி.பி. உதய் நடனம் அமைத்துள்ளார்.

இந்த ஆல்பத்தை இயக்கி உள்ள விவேக் கைப்பா பட்டாபிராம் சில படங்களில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர்.தமிழ், தெலுங்கில் சில குறும்படங்களையும்  விளம்பரப்படங்களையும் இயக்கியுள்ளார்.டிவி ரியாலிட்டி ஷோ தயாரித்திருக்கிறார். தெலுங்கானா அரசுக்காக பல்வேறு ஆவணப்படங்கள் எடுத்துக் கொடுத்துள்ளார். திரைப்படத்திற்கான ஒரு முன்னோட்டம் போல் இந்தப் பாடலை உருவாக்கி உள்ளார். ஒரு திரைப்படத்திற்கான பாடல் உருவாக்கத்தில் என்னென்ன செய்ய வேண்டுமோ அனைத்தையும் இதில் செய்துள்ளார். அது மட்டுமல்ல திரைப்படத்தில் வரும் பாடலைத் தாண்டி  புது முயற்சியாக  தொழில்நுட்பத்தை தனி பாணியில் கையாண்டிருக்கிறார். இந்த ஆல்பம் பாடலை ஜெயண்ட் மியூசிக் சார்பில் வசந்த் ராமசாமி தயாரித்துள்ளார். இது முழுக்க முழுக்க கோவாவில் படமாகி உள்ளது.

‘சின்னஞ்சிறு மழைத்துளியே சிறு காட்சிப் பிழையே’ என்று தொடங்கும் பாடலை,  திரைப்படப் பாடலும் ஆல்பம் பாடலும் ஒன்றாகத் தெரியக்கூடாது என்கிற வகையில் புத்திசாலித்தனமான காட்சிகள் அமைத்து உருவாக்கி உள்ளார் இயக்குனர். “இந்தப் பாடலை   முழு மனதோடு ஒப்புக்கொண்டு எழுதிக் கொடுத்த  இயக்குநர் எஸ். பி .ஹோசிமினின் பெருந்தன்மைக்கு நன்றி.  ஆல்பத்தின் பெயரே இந்த  பாடலில் உள்ள கதையைச் சொல்லும். எப்போதும் புதிய முயற்சிகளை ஆதரிக்கும் தமிழ் ரசிகர்கள் இதையும் ஆதரிப்பார்கள் என்று நம்புகிறேன் “என்கிறார் இயக்குநர் விவேக்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE