சினிமா செய்திகள்

பாலூட்டி வளர்த்த கிளி பணம் பறிக்க பார்க்கும் கிளி

நடிகர் ராஜ்கிரணிடம் அவரது வளர்ப்பு மகள் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் மீறினால் அவரது பெயரை அசிங்கப்படுத்திவிடுவேன் என்று சமூக வலைத்தளம் மூலம் மிரட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ராஜ்கிரண் மற்றும் அவரது மனைவி வளர்ப்புமகளாக இருந்தபோதும் தங்களது சொந்த மகள் போலத்தான் வளர்த்தார்கள் நன்கு படிக்கவைத்து ஆளாக்கினார்கள். காதல் விவகாரத்தில் கூட இந்த வயதில் இதெல்லாம் தவறு என்று அறிவுரை சொல்லி வளர்த்தார்கள். இருந்தாலும் தற்போது ஒருவரை காதலிப்பதாக தெரிவித்தார். அந்த நபரை அழைத்து ராஜ்கிரண் பேசியிருக்கிறார். பிறகு தன் வளர்ப்பு மகளிடம் அவர் தவறான நபராக இருக்கிறார் வேண்டாம் என்று தெரிவித்தார் ஆனால் அவரைத்தான் நான் கல்யாணம் செய்துகொள்வேன் என்று பிடிவாதமாக இருந்ததால் ராஜ்கிரண் உன் ஆசையை நாங்கள் சொல்லியும் கேட்காமல் நீ அவரை திருமணம் செய்துகொண்டால் எங்களுக்கு உனக்கும் எந்த தொடர்பும் இருக்காது எந்த உதவியும் செய்யமாட்டோம் என்று தெரிவித்து விட்டார்.

இந்த நிலையில் அவரது வளர்ப்பு மகள் தான் காதலித்தவரையே திருமணம் செய்துகொண்டு போய்விட்டார். சமீபத்தில் அந்த பெண்ணும் அவரது கணவரும் சேர்ந்து விளம்பர படம் ஒன்றில் ராஜ்கிரண் மகள் என்று சொல்லி நடித்திருக்கின்றனர். இதனை ராஜ்கிரண் கண்டித்துள்ளார். இனிமேல் உங்கள் பெயரை பயன்படுத்த மாட்டோம் என்று தெரிவித்தவர்கள் பணத்தேவைக்காக மீண்டும் அந்த வேலையை செய்துள்ளனர்.
அதோடு மட்டுமின்றி ராஜ்கிரணின் அமைதியை பயன்படுத்தி உங்கள் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திவிடுவோம் என்று மிரட்டி தங்களுக்கு 30 லட்சத்திற்கு மேல் தரவேண்டும் என்று அழுத்தம் கொடுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இதனால் மிகுந்த மன வருத்தத்தில் இருக்கிறார் ராஜ்கிரண்.

குழந்தையை தத்தெடுத்து தங்கள் குழந்தையாக அன்பையூட்டி வளர்த்தார்கள் அது இப்படியா முடியவேண்டும்? பாம்பிற்கு பாலை வார்த்தது போலாகிவிட்டது. வருத்தத்துடன் சொல்கிறார்கள் ராஜ்கிரணின் நணபர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE