கதை ஞானம் உள்ள தயாரிப்பாளர் யார்?
தமிழ் சினிமாவில் வியாபாரம் தெரிந்த; தொழில் நுட்பம் புரிந்த; கதை ஞானம் உள்ள தயாரிப்பாளர்கள் அரிது. அந்த வகையில் தமிழ் சினிமாவுக்கு அத்திப்பூத்தாற்போல் கிடைத்த தயாரிப்பாளர் பிரின்ஸ் பிக்சர்ஸ் லக்ஷ்மண்.
சூர்யா நடித்த ‘சிங்கம் 2’.. கார்த்தி நடித்த ‘தேவ்’, ‘சர்தார்’, சசிகுமார் நடித்த ‘காரி’ உள்ளிட்ட பல படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம், தற்போது தங்களது புதிய பட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இவர்களது புதிய படத்தை இயக்குபவர் ஆண்ட்ரூ லூயிஸ். இவர் விஜய் ஆண்டனி நடித்த ‘கொலைக்காரன்’ படத்தை இயக்கியவர். சமீபத்தில் எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளியான ‘வதந்தி’ என்ற வெப் தொடரை இயக்கியிருந்தார்.
பிரின்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஆண்ட்ரூ லூயிஸ் இணையும் புதிய படம் பற்றிய மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும்.