ஜெயா மேக்ஸில் உலா வரும் ‘செல்பி பொண்ணு’
ஜெயா மேக்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புத்தம் புதிய நிகழ்ச்சி ‘செல்பி பொண்ணு’.
இந்நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் ஞாயிறுகிழமை காலை 9:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.இந்த நிகழ்ச்சியை சிவஸ்ரீ தொகுத்து வழங்குகிறார்.
தொகுப்பாளர் சிவஸ்ரீ தமிழகத்தில் உள்ள வரலாற்று முக்கியமான இடங்கள் மற்றும் சுற்றுலா தலங்களுக்குச் சென்று அங்குள்ள சிறப்புகளை விளக்குவதுடன் அங்குள்ள நேயர்களுக்கு விருப்பமான பாடல்களை கேட்டு ஒளிபரப்பப்படுகிறது. தொலைக்காட்சி ரசிகர்கள், பொது மக்களிடம் இந்நிகழ்ச்சி மிகுந்த வரவேற்பைப்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பாருங்க பாருங்க பார்த்துக்கொண்டே இருங்க!