இளையராஜாவை சந்தித்த ‘கஸ்டடி’ டீம்
நாகசைதன்யாவின் தமிழ்-தெலுங்கு பைலிங்குவல் புராஜெக்ட்டான ‘கஸ்டடி’ திரைப்படத்தை இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்துள்ள நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்துவருகிறது.
லெஜண்ட்ரி இசையமைப்பாளரான இசைஞானி இளையராஜா தற்போது, ‘ராஜா லைவ் இன் கான்செர்ட்’ நிகழ்ச்சிக்காக ஹைதராபாத்தில் உள்ளார். எனவே, இந்த இசை நிகழ்ச்சிக்கு முன்னதாக ‘கஸ்டடி’ டீம் அவரை சந்தித்து தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
இளையராஜாவுடன் நடந்த சந்திப்புக் குறித்து ஒரு ரசிகனாக நாக சைதன்யா பகிர்ந்து கொண்டதாவது, ‘மாஸ்ட்ரோ இளையராஜாவை சந்தித்தபோது என் முகத்தில் எவ்வளவு பெரிய புன்னகை. அவரது இசை என் வாழ்க்கையில் பல தருணங்களில் முக்கியமானதாக இருந்திருக்கிறது. அவரது இசை ரெஃபரன்ஸ் கொண்டு பல காட்சிகளையும், கதையையும் எனக்குள் நானே கற்பனை செய்து பார்த்திருக்கிறேன். இப்போது ‘கஸ்டடி’க்கு அவரே இசையமைத்து இருக்கிறார். உண்மையில் நான் ஆசீர்வதிக்கப்பட்டவன்தான்’ எனக் கூறியுள்ளார்.
கீர்த்தி ஷெட்டி இதில் கதாநாயகியாக நடிக்கிறார். அரவிந்த் சுவாமி வில்லனாக நடிக்க பிரியாமணி வலுவான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், சரத்குமார், சம்பத் ராஜ், ப்ரேம்ஜி, வெண்ணேலா கிஷோர், ப்ரேமி விஷ்வநாத் உள்ளிட்டப் பலர் நடிக்கின்றனர். ஸ்ரீனிவாசா சித்தூரி இந்தப் படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் கீழ் தயாரித்துள்ளார். உயர்தரமான தயாரிப்பு மற்றும் தொழில்நுட்பத் தரத்துடன் இந்தப் படம் உருவாகி உள்ளது. பவன்குமார் இந்தப் படத்தை வழங்குகிறார். அபூரி ரவி வசனம் எழுத, எஸ்.ஆர் கதிர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
‘கஸ்டடி’ மே 12 அன்று திரைக்கு வருகிறது.