திருப்பதியில் நிகழ்ந்த அதிசயம் : ஐஸ்வர்யா ஆச்சர்யம்
லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ‘அதே கண்கள்’, ‘பெட்ரோமாக்ஸ்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில் ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘தீராக் காதல்’. இப்படம் மே 26 அன்று திரைக்கு வரவுள்ள நிலையில் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது.
நிக்ழ்வில் இசையமைப்பாளர் சித்து குமார் பேசியதாவது:-
“ ‘தீராக் காதல்’ திங்க் மியூசிக் சந்தோஷ் மூலம்தான் இயக்குநர் ரோகின் அறிமுகம். என்னை இந்தப்படத்தில் பயன்படுத்திய இயக்குநருக்கு நன்றி. லைக்கா போன்ற நிறுவனத்தில் படம் செய்வது மகிழ்ச்சி. எல்லோர் வாழ்விலும் கடந்து வந்த சில சம்பவங்களை இந்தப்படம் ஞாபகப்படுத்தும். சிலருக்கு இந்தப்படம் விழிப்புணர்வு தரும். இந்தப்படம் கண்டிப்பாக உங்களுக்குப் பிடித்த படமாக இருக்கும்”என்றார்.
எழுத்தாளர் ஜி. ஆர். சுரேந்திர நாத் பேசியதாவது:-
“இந்த தீராக் காதல் கதையை உருவாக்கியதே ஒரு தனிக் கதை. நானும், ரோகினும் ‘கும்பளாங்கி நைட்ஸ்’ படம் பார்க்கப் போனோம். அப்போது ரோகின் இந்தமாதிரி படம் தமிழில் பண்ணவேண்டும் என்றார். எழுத்தாளருக்கு கிரடிட் தந்தால், அது நடக்கும் என்றேன். நான் தர்றேன் என்றவர், இப்படத்தில் திரைக்கதை வசனம் தனியாக கிரடிட் தந்துள்ளார். அதற்காக அவருக்கு நன்றி. முன்பு எக்ஸ் லவ்வரை சந்திப்பது மிக அரிது. ஆனால் இந்த ஜெனரேஷனில் மனைவியை விட, எக்ஸ் லவ்வருடன்தான் டச்சில் இருக்கிறார்கள். இந்தப்படம் நடக்கும் போது, என் தாய் தந்தையரை உடல் நிலை காரணமாக இழந்தேன். பணத்தின் மீது உறவின் மீது என எல்லாவற்றின் மீதும் நம்பிக்கை இழந்தேன். ஆனால் நம்பிக்கை இழக்காத ஒன்று இந்தப்படத்தின் கதை தான். இந்தக்கதை உணர்வுகளை.. நடிகர்கள் நன்றாக நடித்தால்தான் ரசிகர்களிடம் போய்ச் சேரும். ஜெய், ஐஸ்வர்யா, ஷிவதா மூவரும் அற்புதமாக நடித்துள்ளனர்”.
நடிகை ஷிவதா பேசியதாவது:-
“இதற்கு முன்னாடி ரோகினுடன் ‘அதே கண்கள்’ படத்தில் வேலை பார்த்துள்ளேன். அப்போதே அவரிடம் அடுத்து என்ன எனக் கேட்டேன். காதல் கதைதான் என்றார். என்னை நடிக்க வைப்பீர்களா? என்று கேட்டேன். இந்தக்கதையை அனுப்பினார். நான் கண்டிப்பாக நடிக்கிறேன் என்று சொல்லி நடித்தேன். ஐஸ்வர்யா அடுத்தடுத்து வித்தியாசம் வித்தியாசமாகப் படம் நடித்துக் கலக்கி வருகிறார். அவர் என் நடிப்பு பிடித்திருக்கிறது என்று சொன்னது பெருமை. ஜெய் கலாய்த்துக்கொண்டே இருப்பார். நிறைய உறுதுணையாக இருந்தார். ஒளிப்பதிவாளர் என்னை அழகாகக் காட்டியுள்ளார். இந்தப்படம் எல்லோருக்கும் ஈஸியாக கனக்ட் ஆகும்.” என்றார்.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியதாவது:-
“எல்லா கதைகளுக்கும் பின்னாடி சில கதைகள் இருக்கும். அதேபோல் எனக்கும் இயக்குநர் ரோகினுக்கும், இரண்டு வருடக் கதை உண்டு. நாங்கள் பல நாட்களுக்கு முன்னதாகவே படம் பண்ண வேண்டியது, எங்களின் கதையைக் கேட்டு, லைக்கா நிறுவன தமிழ் குமரன் சார் இரவு 11 மணிக்கு போன் செய்து கதை நன்றாக இருப்பதாகச் சொன்னார். அது ஒரு பெரிய சந்தோசத்தைக் கொடுத்தது. ஆனால் படம் லேட்டாகவே.. படம் நடக்க வேண்டுமெனத் திருப்பதி மலை ஏறி நேர்த்திக்கடன் செலுத்தினோம், அங்கு இருந்த போது அதிசயம் நடந்தது. தமிழ் குமரன் இந்தப் படம் செய்யலாம் என்றார். இந்தப்படம் மனதிற்கு இதமான ஒரு அனுபவத்தை அனைவருக்கும் அளிக்கும். ஜெய்தான் நடிக்க வேண்டும் என்று இயக்குநர் ஒரே முடிவாக இருந்தார். ஏன் என்று தெரியவில்லை. அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். ஷிவதாவின் தீவிர ரசிகை நான். படத்தில் ஒளிப்பதிவு மிகவும் அழகாக இருந்தது. அனைவரும் அதனை ரசிப்பீர்கள்.”
நடிகர் ஜெய் பேசியதாவது:-
இந்தப் படத்தின் கதையை, கதையாகக் கேட்கும்போது நன்றாக இருக்கிறது. ஆனால் எனக்கு நன்றாக இருக்குமா? என்று ஒரு குழப்பம் இருந்தது. ஆனால் எனக்கு இயக்குநர் மீது நம்பிக்கை இருந்தது. அவரது ‘அதே கண்கள்’ படத்தை 4 முறை பார்த்துள்ளேன். இந்த மாதிரி இயக்குநரிடம் பணிபுரிய வேண்டும் என ஆசைப்பட்டேன். அது நடந்தது சந்தோஷம். ஒளிப்பதிவாளர் ரவி என்னை இந்தப் படத்தில் அழகாகக் காண்பித்துள்ளார். பாடல்களும், இசையும் அருமையாக வந்துள்ளது. சித்துவின் ரசிகன் நான். இந்தப் படம் அனைவருக்கும் தங்களுடைய சொந்த வாழ்வில் நடக்கும் நிகழ்வைப் போல் இருக்கும். இதற்காக மொத்த குழுவும் கடுமையாக உழைத்துள்ளனர். ரோகின் ஒரு மிகப்பெரும் புத்திசாலி. அவருடைய பணி தனித்துவமாக இருக்கும். படத்தில் இரண்டு நடிகைகளும் சிறப்பாக நடித்துள்ளனர். நான் ஐஸ்வர்யாவின் பெரிய ரசிகன். தயாரிப்பாளர் லைக்கா தமிழ் குமரனுக்கு நன்றி”
இயக்குநர் ரோகின் வெங்கடேசன் பேசியதாவது..
“இந்த சந்திப்பை ஒருங்கிணைத்த லைக்காவிற்கு நன்றி. ஆசைப்பட்ட வாழ்க்கை ஆசைப்பட்ட பொருள் ஆசைப்பட்ட நேரத்துல கிடைக்காம போறதுதான் வாழ்க்கையோட சுவாரஸ்யம். பாலகுமாரன் சார் வார்த்தை, எல்லாருடைய வாழ்க்கைக்கும் பொருந்தும். இது என்னோட இரண்டாவது படமா வந்திருக்க வேண்டியது. சுரேந்திரன் சார் நிறையக் காதல் கதைகளை எழுதியிருக்கிறார். இந்தக்கதை ஒரு அற்புதம். அவரோடு நிறையச் சண்டை போட்டிருக்கிறேன். ஆனால் என்னோட எப்போதும் கூட நின்றிருக்கார். இது வேற ஒரு புரடக்சனுக்கு பண்ண வேண்டியது. அந்த தயாரிப்பாளர் சுதன்தான் ஐஸ்வர்யா கூட கனக்ட் பண்ணிவிட்டார். அவர் வேறு படங்கள் செய்து கொண்டிருந்த போதும் இந்தப்படம் பத்தி அவ்வப்போது பேசிக்கொண்டே இருப்பார். சுதன் இந்தப்படம் செய்யவில்லை என்ற போதுதான் லைக்காவிடம் போனோம். ஹீரோ எனும் போது ஜெய் ஞாபகத்திற்கு வந்தார். ஏன் ஜெய் என்றால், பார்ப்பவர்களுக்குக் கதையில் இந்தாள் இதை செய்திருப்பான் எனத் தோன்ற வேண்டும். அது அவர் முகத்தைப் பார்த்தால் மட்டுமே இருக்கும். ஷூட்டிங் செம்ம கலகலப்பாக இருக்கும். ஆனால் ஷாட்டின் போது அட்டகாசமாக நடித்து அசத்திவிடுவார்கள்.
ஜெய் வசனம் இல்லாத போதுதான் மாட்டிக்கொள்வார். என்னை நடித்துக் காட்டச் சொல்வார். நான் கேவலமாக நடிப்பேன். நீங்களே நடித்து விடுங்கள் என்பேன். ஐஸ்வர்யா மேடம் எதுவானாலும் அசத்திவிடுவார். ஆனால் டயலாக்கை அவ்வப்போது மாற்றி விடுவார். ஆனால் அங்கேயே நான் மாற்றிப்பேசுங்கள் என அடம்பிடிப்பேன். மற்றபடி அவர் அட்டகாசமாகச் செய்துவிடுவார். ஷிவதா மேடம் மிக புரபஷனல். வந்தால் அவர் வேலையை சிறப்பாகச் செய்து விடுவார். அம்ஜத் என் எல்லாப்படத்திலும் இருக்கிறார். தன் கேரக்டருக்காக கடுமையாக உழைக்கக் கூடிய நடிகர். மிகச்சிறந்த நண்பர். ரவி எல்லாமும் அவரிடம் சொல்ல முடியும். என்னைவிட இந்தக்கதை மீது நம்பிக்கை கொண்டவர். எடிட்டர் பிரசன்னாவும், நானும் ஒன்றாக படித்தவர்கள். என்னை டென்ஷனே இல்லாமல் பார்த்துக்கொள்வார். டெக்னிகல் டீமில் எல்லோருமே மிகக்கடுமையாக உழைத்துள்ளனர். இந்தப்படத்தில் மிக முக்கியமானவர் சித்து, இந்தப்படம் ஆரம்பிக்கும் போது, வீட்டில் காதலை ஒத்துக்கொள்ளவில்லை என்றார். அப்புறம் ஒத்துக்கொண்டு கல்யாணம், ஹனிமூன் எல்லாமே இந்தப்படத்திலேயே பார்த்துவிட்டார். இந்தப்படத்தின் காதல், சோகம் அனைத்துக்கும் அழகாக இசை தந்துள்ளார்”