நிகழ்வுகள்

ஆர்யாவை மிரட்டிய இயக்குனரின் நடிப்பு

ஜீ ஸ்டூடியோஸ் & ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்க்ஷன்ஸ் வழங்க, இயக்குநர் முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள படம் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’. கிராமத்துப் பின்னணியில் ஆக்‌ஷன் படமாக உருவாகியுள்ள இப்படம் ஜூன் 2ஆம் தேதி வெளியாகிறது. பட வெளியீட்டையொட்டி பத்திரிகையாளர்களை சந்தித்தனர் படக்குழுவினர்.

அப்போது ஜீ ஸ்டூடியோஸ் கிருபாகரன் பேசியதாவது:-

“இந்த படத்தின் டிரெய்லரை முன்னதாகவே பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது, பார்த்ததும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. மும்பையில் எங்கள் தலைமை நிறுவனத்திற்கும் இதனை அனுப்பினோம். எங்களுக்கு ஏற்பட்ட அதே உற்சாகம் அவர்களுக்கும் இருந்த.து அன்றே இந்த படத்தை ஜூன் 2ஆம் தேதி வெளியிடலாம் என்று முடிவு செய்தோம். இப்படிப்பட்ட படைப்பை அளித்த இயக்குநர் முத்தையாவிற்கு மிகவும் நன்றி”

தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி S.சக்திவேல் பேசியதாவது:-

“இந்தப்படம் பற்றி எல்லோரும் சொல்லிவிட்டார்கள். இந்தப்படத்தில் பணம் சம்பாதிக்கிறோமோ இல்லையோ உறவுகளைச் சம்பாதித்துள்ளோம். ஆர்யா மிக மிக நல்ல மனிதர் என்பதை இதில் உணர்ந்தோம். இந்தப்படத்தை தயாரிக்கும் வாய்ப்பை தந்த முத்தையாவிற்கு நன்றி. இந்தப்படம் ஒரு குடும்பத்தில் வாழ்ந்த மாதிரி இருக்கும்.”

படத்தின் நாயகி சித்தி இதானி பேசியபோது, “என்னுடைய முதல் படமான ‘வெந்து தணிந்தது காடு’ படத்திற்கு நீங்கள் ஆதரவு கொடுத்ததை போல் இந்தப் படத்திற்கும் ஆதரவு தர வேண்டும். ஆர்யா மிகச்சிறப்பான ஒத்துழைப்பைத் தந்தார். இந்தப்படம் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது”என்றார்

இயக்குநர் முத்தையா பேசியதாவது:-

“இது என்னுடைய எட்டாவது படம். எனது அனைத்து படங்களும் ஒரு உறவைப் பற்றிய கதையாக இருக்கும் ஆனால் இந்த படத்தில் நன்றி உணர்வைப் பற்றிக் கூற முயற்சி செய்துள்ளேன். படத்தில் அனைத்து கதாபாத்திரமும் ஒரு உணர்வை மற்றும் உறவைச் சொல்லும். படத்தின் கதைக்களம் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பது போல அமைந்துள்ளது. நிறைய நகரப் படங்கள் வருகிறது. இந்த மண் சார்ந்த படத்தையும் நீங்கள் ஆதரிக்க வேண்டும். இந்தப் படத்தில் அனைவரும் மிகப்பெரிய உழைப்பைக் கொடுத்துள்ளனர். தயாரிப்பாளர் மிகப்பெரிய ஆதரவு எனக்குக் கொடுத்தார்.

இறுதியாக நடிகர் ஆர்யா பேசியதாவது:-

“முத்தையா பயங்கரமான சிட்டி சப்ஜெக்டோட என்னிடம் வந்தார். இது வேண்டாம் ஒரு கிராமத்துப் படம் பண்ணனும் அதுவும் உங்க கூட பண்ணனும்னு சொன்னேன். அவர் இந்தக்கதையோடு திரும்ப வந்தாரு. அவரோட படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். எமோஷன் எப்பவும் சூப்பரா இருக்கும். சீன் சொல்லும் போதே அழுதுருவாரு. அவர் மாதிரி என்னால நடிக்க முடியுமானு பயமா இருக்கும். நிறைய நிறையச் சம்பவங்கள் கதைகள் சொல்லிக்கொண்டே இருப்பாரு. மிகத்திறமையான இயக்குநர். தயாரிப்பாளர்கள் அவ்வளவு உறுதுணையா இருந்தாங்க. ஜீ ஸ்டூடியோஸ் எப்பவும் எனக்கு பெரிய சப்போர்ட் தந்திருக்காங்க. இந்தப்படத்துக்காகவும் தந்திருக்காங்க அவங்களுக்கு நன்றி. ஹீரோயினுக்கு என்னைவிட டயலாக் அதிகம். அவங்களுக்கு நிறைய காட்சிகள் இருக்கு. சாதாரணமா வந்துட்டு போற ஹீரோயின் ரோல் இல்ல. சூப்பரா நடிச்சிருக்காங்க. ஒரு செம்மையான டீம் முத்தையா சார் வச்சிருக்காரு. டெக்னிகலா எல்லோருமே அட்டகாசமா பண்ணிருக்காங்க. எல்லோரும் ஒரு குடும்பமா தான் இருந்தாங்க. என்னோட படங்கள்ல இந்தமாதிரி தோற்றம் பண்ணதே இல்ல உங்களுக்கு பிடிக்கும்னு நம்புகிறேன்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE