நிகழ்வுகள்

‘தேஜாவு’ இயக்குனரின் அடுத்த படம் ‘தருணம்’ தொடக்க விழா

வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் அருள்நிதியை வைத்து ‘தேஜாவு’ படத்தை இயக்கி முதல் படத்திலேயே கவனம் ஈர்த்த அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கும் இரண்டாவது படம் ‘தருணம்’. ழென் ஸ்டுடியோஸ் சார்பில் இப்படத்தை புகழ் தயாரிக்கிறார். நாயகனாக கிஷன் தாஸ், நாயகியாக ஸ்மிருதி வெங்கட் நடிக்கும் இப்படத்தை ஆர்கா எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் இணைந்து தயாரிக்கிறது.

படத்தின் தொடக்கவிழா சென்னையில் நடந்தது. நிகழ்வில் அருண் பாலாஜி  பேசியபோது, “அரவிந்த் ஶ்ரீநிவாசன் என்னுடைய நெருங்கிய நண்பர். இன்றைய இயக்குநர்களில் மிகத்திறமையான இளம் இயக்குநர். தயாரிப்பாளர்களுக்கு மிகவும் பிடித்த இயக்குநர். நல்ல படத்தை தருவார். இந்த திரைப்பட குழுவினருக்கு வாழ்த்துக்கள்”என்றார்.

தயாரிப்பாளர் விஜய் பாண்டி பேசியபோது, இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் எப்போதும் செலவு வைக்க மாட்டார். தயாரிப்பாளருக்கான இயக்குநர். இந்தப்படத்தைக் கண்டிப்பாகச் சிக்கனமான பட்ஜெட்டில் நல்ல படைப்பாக எடுப்பார்”என்றார்.

தயாரிப்பாளர் டில்லிபாபு பேசியபோது, “ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. அரவிந்த் ஶ்ரீநிவாசன் முதல் படத்தையே மிக நன்றாக இயக்கியிருந்தார். மிகப்பெரிய இடத்திற்கு செல்வார். நிறைய புது தயாரிப்பாளர்கள் வருகிறார்கள். நிறைய உதவி இயக்குநர்கள் கதைகளோடு காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். தயாரிப்பாளர் புகழ் வெற்றி பெற வாழ்த்துக்கள்”என்றார்.

எடிட்டர் அருள் இ சித்தார்த் பேசியபோது, “நான் புதுமுகம் என்ற தயக்கம் இல்லாமல் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் எனக்கு ‘தேஜாவு’ படத்தில் வாய்ப்பு தந்தார். இந்தப்படம் பற்றிச் சொன்னபோது சம்பளமே பேச வேண்டாம் நான் செய்கிறேன் என்றேன். கிஷனுக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். என் மனைவி அவரின் ரசிகை. இந்தப் படம் செய்வது மகிழ்ச்சி”என்றார்.

ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாசார்ஜி பேசியதாவது:-

“இந்தப்படம் படப்பிடிப்பிற்காக ஆவலுடன் உள்ளேன்.  இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசனுடன் ரொம்ப காலமாக வேலை செய்வதற்காகப் பேசிக்கொண்டிருந்தோம். கிஷன் தாஸ் & ஷ்ம்ருதி வெங்கட் உடன் பணியாற்றுவது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த வாய்ப்பிற்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன்”

நடிகை ஸ்மிருதி வெங்கட் பேசியபோது, “எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசனுக்கு நன்றி. இந்தப்படத்தில் இதுவரை செய்யாத கதாப்பாத்திரம். முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். இந்தப்படம் பெரிய வெற்றிபெறும்”என்றார்.

நடிகர் கிஷன் தாஸ் பேசியதாவது:-

“நான் இன்னும் புதுமுகம்தான். இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் கதை சொல்லும்போதே முதலிலிருந்தே இந்தப்படத்தைப் பெரிய படமாக ட்ரீட் செய்யலாம் என்றார். இப்போதே மோஷன் போஸ்டர், புரமோ வீடியோவுடன் ஆரம்பித்துள்ளோம். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. நான் திரைத்துறையில் இருப்பதற்குக் காரணமே தர்புகா சிவாதான், அவருக்கு என் நன்றி. அவர் இந்தப்படத்திற்கு இசையமைப்பது மகிழ்ச்சி. கண்டிப்பாக இந்தப்படம் பெரிய வெற்றிப்படமாக அமையும்.”

தயாரிப்பாளர் புகழ் பேசியபோது, “அரவிந்த் ஶ்ரீநிவாசனுடன் என் நட்பு 18 வருடங்களுக்கு மேலானது. ஒரு நல்ல படைப்பைத் தரவே நாங்கள் உழைக்கிறோம். அரவிந்த் ஶ்ரீநிவாசன்  என் நண்பர் என்பதால் எனக்காக இன்னும் கடினமாக உழைக்கிறார். அவர் மணிரத்னம், கௌதம் மாதிரி படம் பண்ண வேண்டும் என்று சொல்வார். இந்தப்படம் அந்த கனவை நனவாக்கும். மிக நல்ல படக்குழு எங்களுக்கு அமைந்துள்ளது”என்றார்.

இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன்  பேசியதாவது:-

“இன்று காலையில் எங்கள் படத்திற்காக வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. புகழ் 18 வருடங்களாக நெருங்கிய நண்பர். பல காலம் நாங்கள் படம் செய்யப் பேசிக்கொண்டிருந்தோம். எனக்காக என்னை நம்பி எல்லாம் செய்வார். அவருக்கு இது வெற்றிப்படமாக அமையும். கிஷன், ஸ்மிருதி வெங்கட் புதுசான இளமையான ஜோடி. தர்புகா சிவா இசையமைக்கிறார். அவரிடம் நான்கு ஹிட் பாடல்கள் கேட்டிருக்கிறேன். கண்டிப்பாக பண்ணிடலாம் என்றார்.  என் தேஜாவு பட எடிட்டர் இந்தப்படத்திலும் பணியாற்றுகிறார். தேஜாவுவை தாண்டி ஒரு நல்ல படைப்பைத் தர வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். தேஜாவு படத்திற்குப் பிறகு மீண்டும் ஒரு நல்ல மிஸ்டரி திரில்லர் பண்ணக்கூடாது என்பதில் நிச்சயமாக இருந்தேன். பல கதைகள் பேசினோம். இந்தக்கதைக்காக 2 மாதங்கள் எடுத்துக் கொண்டேன். தயாரிப்பாளர் புகழ் என்னை எதுவுமே கேட்கவில்லை. மிக ஆதரவாக இருந்தார். இது கண்டிப்பாக அனைவருக்கும் மைல்கல் படமாக இருக்கும்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE