நிகழ்வுகள்

சினிமாவில் பரத் அடித்த அரை சதம் : ‘லவ்’ படவிழாவில் கேக் வெட்டி கொண்டாட்டம்

ஆர்பி பிலிம்ஸ் சார்பில் பாலா தயாரித்து இயக்க, கதாநாயகனாக பரத், கதாநாயகியாக வாணி போஜன் நடித்திருக்கும் படம் ‘லவ்’. காதல், த்ரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள இப்படம் ஜூலை 28ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதனிடையே இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. படத்தின் டிரலரைமூத்த பத்திரிகையாளர்கள் வெளியிட்டனர்.

விழாவில், “இசையமைப்பாளர்  ரோனி ரஃபேல் பேசியதாவது:-

“தமிழில் இது எனது முதல் படம். கேரளாவில் நிறைய படங்களுக்கு இசையமைத்துள்ளேன். மலையாளப் படம் மூலம்தான் பரத்தும் பாலாவும் அறிமுகமானார்கள். தமிழில் வேலை செய்ய வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. பரத்தின் 50வது படத்தில் வேலை பார்த்தது மகிழ்ச்சி. இந்தப்படத்தில் வாய்ப்பு தந்த இயக்குனர் RP பாலாவுக்கு நன்றி. பாடல்கள் எல்லாம் நன்றாக வந்துள்ளன. படமும் நன்றாக வந்துள்ளது” என்றார்.

எடிட்டர் அஜய் மனோஜ் பேசியபோது, “படம் நன்றாக வந்துள்ளது. பரத் மற்றும் கதாநாயகியின் கடைசி 20 நிமிட காட்சிகள் அருமையாக வந்துள்ளது. பரத் சாரின் 50வது படத்தில் பணிபுரிவது மகிழ்ச்சியாக உள்ளது”என்றார்.

ஒளிப்பதிவாளர் பிஜி முத்தையா பேசியபோது, “ஒரு டீமோட பெரிய சக்ஸஸ் என்பது அந்த டீம் வெற்றி பெற்று மீண்டும் அதே டீம் சேர்ந்து வேலை பார்ப்பதுதான். அது போல் “லவ்” படம் வெற்றி பெற்று இதே டீம் மீண்டும் வேலை பார்க்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்” என்றார்.

நடிகை வாணி போஜன் பேசியபோது, “நான் நிறையப் படங்கள் நடித்திருக்கிறேன். ஆனால் சில படங்களே மனதிற்கு முழு திருப்தியை கொடுக்கும். இந்தப்படத்தில் நான் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன் என்ற திருப்தி எனக்கு உள்ளது. இந்தப் படத்தில் நானும் பரத்தும் நிறைய சண்டைகள் போட்டுள்ளோம், அடிகளும் பட்டது. ஆனால் அது படத்திற்காக மட்டும் தான். படம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது உங்களுக்கும் கண்டிப்பாகப் பிடிக்கும்”என்றார்.

இயக்குநர் RP பாலா பேசியதாவது:-

“படம் ஜூலை 28 ஆம் தேதி வருகிறது. இப்போது படத்தை எடுப்பதைவிட படத்தை ரிலீஸ் செய்வது கடினமாக இருக்கிறது. இப்படத்தின் டீம் எனக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்தார்கள். பரத் படம் முழுவதும் பெரும் உறுதுணையாக இருந்தார். முத்தையா சார் இன்று வரை இப்படத்திற்கு வேலை செய்கிறார். அவர் படம் போல் பார்த்துக் கொள்கிறார். அவருக்கு வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டுள்ளேன். இசையமைப்பாளர் மரைக்காயர் படத்தில் வேலை செய்தபோது, இந்தப்படம் பற்றிச் சொன்னேன். எனக்காக இந்த படத்தில் பணியாற்றியுள்ளார். டேனியல் மிகச் சிறந்த நண்பர். பரத் என்னை நம்பி 50வது படம் தந்துள்ளார். படம் நன்றாக வந்துள்ளது” என்றார்.

நடிகர் பரத் பேசியதாவது :-

“இங்கு எனது 50 வது படத்தில் உங்களுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடியது மகிழ்ச்சி. என் திரை வரலாற்றில் மோசமான படங்கள் செய்த போதும், நீ நல்லா பண்ணியிருக்க, நல்லா பண்ணு, நல்லா வருவ என எனக்குத் தொடர்ந்து ஊக்கம் தந்து வரும் உங்களுக்கு நன்றி. இந்தப் பயணம் மிகப்பெரியது. ஷங்கர் சார், ஏ எம் ரத்னம் சாருக்கு இந்த நேரத்தில் நன்றி சொல்லிக் கொள்கிறேன். படம் செய்யும் போது மிக உற்சாகத்துடன் வேலை பார்க்கிறோம். ஆனால் படம் ரிலீஸ் என வரும் போது பெரும் பிரச்சனைகள் வந்து நிற்கிறது. மன உளைச்சல்கள் தருகிறது. சினிமா இரண்டாகப் பிரிந்து போயிருக்கிறது. ஆனால் நான் எப்போதும் என் வேலையை சிறப்பாக செய்து வருகிறேன். அதுதான் முக்கியம். இந்தப் படம் எங்கேயும் உங்களுக்கு போரடிக்காது. ஒரு சிறப்பான படம் பார்க்கும் அனுபவம் தரும். என் இயக்குநர் தயாரிப்பாளர் RP பாலா சாருக்கு நன்றி”என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE