கே.டி.குஞ்சுமோன் தயாரிக்கும் ‘ஜெண்டில்மேன் 2’ படப்பிடிப்பு தொடக்கம்
மெகா பட்ஜெட் தயாரிப்பாளரான கே.டி குஞ்சுமோன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தயாரிக்கும் படம் ‘ஜென்டில்மேன் II’. பிரமாண்டமாக உருவாகவுள்ள இப்படத்தை ஏ.கோகுல் கிருஷ்ணா இயக்குகிறார். ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசையமைக்க, கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதுகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு இன்றுசத்யா ஸ்டுடியோவில் தொடங்கியது. தமிழக தகவல் ஒளிபரப்பு மற்றும் செய்தித்துறை அமைச்சர் மாண்புமிகு அமைச்சர் எம்.பி.சாமிநாதன் ஸ்விட்ச் ஆன் செய்ய, எம்.ஜி.ஆர்-ஜானகி காலேஜ் மற்றும் சத்யா ஸ்டுடியோ தலைவர்
டாக்டர்.குமார் ராஜேந்திரன் கிளாப் அடிக்க, கவிப்பேரரசு வைரமுத்து ஆக்ஷன் சொல்ல, படபிடிப்பு ஆரம்பமானது.
முதல் காட்சியில், நாயகன் சேத்தன், நாயகி நயந்தாரா சக்ரவர்த்தி முதல் ஷாட்டில் பங்கு பெற்றனர்.
அதனைத்தொடர்ந்து நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் பேசியதாவது :-
“எனது ஆரம்ப காலகட்டங்களில் எம்.ஜி.ஆர் நடித்த பல படங்கள், சத்யா மூவீஸ் தயாரித்த பல படங்களை நான் வினியோகம் செய்துள்ளேன். என் வாழ்க்கையின் உயர்வுக்கு முக்கிய பங்களித்த இந்த சத்யா ஸ்டியோவில் ‘ஜெண்டில்மேன்-ll’
படப்பிடிப்பு தொடங்கியதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்” தொடர்ந்து சென்னையிலேயே 25 நாட்கள் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர்.