கணேஷ்பாபுவின் ‘கட்டில்’ அடுத்த மாதம் ரிலீஸ்
இ.வி.கணேஷ்பாபு தயாரித்து, இயக்கி, கதை நாயகனாக நடித்திருக்கும் கட்டில் திரைப்படம் நவம்பர் 24 அன்று மிக அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்களில் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சிருஷ்டி டாங்கே கதாநாயகியாக நடித்திருக்கும் இத்திரைப்படத்திற்கு ஸ்ரீகாந்த்தேவா இசையமைத்திருக்கிறார். வைரமுத்து, மதன் கார்க்கி பாடல்கள் எழுதி இருக்கிறார்கள்.
ரிலீசுக்கு முன்பே பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் இப்படம் விருதுகளை பெற்றுள்ளதால், மக்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருப்பதாக இத்திரைப்படத்தின் இயக்குனர் இ.வி.கணேஷ்பாபு கூறுகிறார்