நிகழ்வுகள்

தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்க கோரிக்கை : விரைவில் நிறைவேற்ற அமைச்சர் உறுதி

தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தீபாவளி மலர் வெளியீட்டு விழா மற்றும் சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்வு வெகு விமர்சையாக நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக மாண்புமிகு செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் கலந்து கொண்டு தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தீபாவளி மலரை வெளியிட்டார்.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய விழாவை  ஈரோடு மகேஷ் தொகுத்து வழங்கினார். சங்க செயலாளர் கோடங்கி ஆபிரகாம் வரவேற்புரை வழங்க தொடர்ந்து சங்கத் தலைவர் கவிதா தலைமை உரையாற்றினார். அதில், “சங்க செயல்பாடுகள் குறித்தும், மேலும் திரைப்பட பத்திரிகையாளர்கள் நலனுக்காக செய்தித்துறை தரப்பிலும் செயல்திட்டங்கள் உருவாக்க வேண்டும்” என்னும் வேண்டுகோளையும் முன்வைத்தார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட செய்தித் துறை அமைச்சர்  சாமிநாதன்,  தீபாவளி சிறப்பிதழை வெளியிட்டு பேசியதாவது:-

“தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பாக நடக்கும் இந்த தீபாவளி மலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பாகவும் தமிழ்த் திரைப்பட நிகழ்வுகள் சார்பாகவும் பலமுறை என்னை அழைத்தும் என்னால் வர இயலவில்லை. இந்த நிகழ்விலாவது நிச்சயம் கலந்து கொள்ள வேண்டும் என்கிற நோக்கத்துடன் இன்று இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளேன். தமிழ்த் திரைப்படத்தின் மூலம் தனது பயணத்தை துவங்கி இன்று விளையாட்டு நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்று இருக்கும் மாண்புமிகு அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் ஆலோசனைகளை பெற்று திரைப்படத்துறையில் ஏராளமான செயல் திட்டங்கள், கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இன்று தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பாக வைக்கப்பட்ட கோரிக்கைகளும் செய்தியாளர்களுக்கான நலனில் தேவைப்படும் செயல் திட்டங்களும் கூடிய விரைவில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆலோசனைபடியும் விரைவில் நிறைவேற்ற ஆவண செய்வோம்”

முன்னதாக ராக்கிங் லேடிஸ் பேண்ட் குழுவின் இசை நிகழ்ச்சி நடந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE