‘டங்கி’ பாடல் : அந்தரத்தில் ஆட்டம் போட்ட ஷாரூக் ரசிகர்கள்
இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்திருக்கும் “டங்கி” திரைப்படம் அடுத்த வாரத்தில் பெரிய திரையில் வெளியாகவுள்ளது. தயாரிப்பாளர்கள் பாடல்கள் மற்றும் டிரெய்லர் என வரிசையாக படம் குறித்த அப்டேட்கள் மூலம் பார்வையாளர்களின் உற்சாகத்தை உயரத்தி வருகிறார்கள். படத்தின் வெளியீட்டு தேதி நெருங்க, நெருங்க ரசிகர்களின் உற்சாகம் எல்லைகடந்து வருகிறது. முழு தேசமும் படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கும் வேளையில், ஷாருக்கான் ரசிகர்கள் சூப்பர் ஸ்டாரின் மீதான தங்கள் அன்பை வெளிப்படுத்துவதில் எந்த ஒரு வாய்ப்பையும் தவறவிடுவதில்லை, அவர்கள் டங்கி டிராப் 2 லுட் புட் கயா பாடலை கொண்டாடும் இந்த வீடியோ அதற்கு சான்றாகும்.
சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு வீடியோவில், SRK ரசிகர் மன்றம், SRK யுனிவர்ஸ் ரசிகர்கள், டங்கி டிராப் 2 லுட் புட் கயா பாடலுக்கு, விமானத்தில் நடனமாடுவதைக் காணலாம், SRK வின் அதே நடன அசைவுகளுடன் மும்பை பார்க்கில் அமைக்கப்பட்ட பிரம்மாண்டமான விமான செட்டில் அவர்கள் உற்ச்காகமாக நடனமாடுகிறார்கள். ரசிகர்கள் SRK மீதான தங்கள் தீவிரமான அன்பை எட்டுதிக்கும் வெளிப்படுத்தி வருகிறார்கள்.
https://www.instagram.com/reel/C0tFPsZrYG8/?igshid=MzRlODBiNWFlZA==
ஷாருக்கானுடன், பூமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட நட்சத்திரக் குழு ‘டங்கி’ திரைப்படத்தில் நடித்துள்ளது.
இத்திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் வழங்குகிறார்கள், ராஜ்குமார் ஹிரானி மற்றும் கௌரி கான் இணைந்து தயாரித்துள்ளனர். அபிஜத் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் கனிகா தில்லான் இணைந்து எழுதியுள்ளனர். டங்கி 2023 டிசம்பர் 21 ஆம் தேதி வெளியாகிறது.