சினிமா செய்திகள்

விஜய் ஆண்டனியின் அர்ப்பணிப்பு : வியக்கும் ‘ஹிட்லர்’ டீம்

 T.D.ராஜா, D.R.சஞ்சய் குமார் தயாரிப்பில், இயக்குநர் தனா இயக்கத்தில், நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள  திரில்லர் திரைப்படம்  ‘ஹிட்லர்’. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் T.D.ராஜா பேசியதாவது:-
 “இந்தத் திரைப்படத்தில் ஒவ்வொரு தொழில் நுட்ப கலைஞர்களும் மிக அர்ப்பணிப்போடு மிகக்கடினமாக உழைத்துள்ளனர். மியூசிக் டைரக்டர், ஸ்டண்ட் டைரக்டர் என ஒவ்வொருவரும் அவர்களின் சிறப்பான உழைப்பைத் தந்துள்ளனர். நடிகை ரியா சுமன் அருமையான நடிப்பை வழங்கியுள்ளார். தனா சார் 24 மணி நேரமும் இந்தப்படத்தையே நினைத்துக் கொண்டிருப்பார். இரவு பகலாக படத்திற்காக உழைத்துள்ளார். விஜய் ஆண்டனி மனிதநேய மிக்க மாமனிதன். அவரது சொந்தப் படத்தை விட இந்தப் படத்தின் மீது அக்கறை கொண்டு என்னிடம் எப்போதும் விசாரித்துக் கொண்டிருப்பார். அவரது மனதிற்கு நன்றி”
இசையமைப்பாளர் மெர்வின் பேசியதாவது:-
“ நாக்க முக்க.. பாடல் வெளியான காலத்திலிருந்து நாங்கள் விஜய் ஆண்டனி ரசிகர்கள். இப்போது அவருடன் இணைந்து பணிபுரிவது மகிழ்ச்சி. ஒரு நல்ல திரைப்படத்தில் நாங்களும் இருக்கிறோம் என்பது மகிழ்ச்சியைத் தருகிறது. கண்டிப்பாக இப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பீர்கள் என்று நம்புகிறோம்.”
நடிகர் விவேக் பிரசன்னா பேசியதாவது:-
“ ஒரு மிகச்சிறப்பான படைப்பில் என்னை இணைத்துக் கொண்டதற்கு நன்றி. இயக்குநர் தனா இதுவரை நான் நடித்த படத்தில் இல்லாத புதிய ரியாக்சனை இப்படத்தில் என்னிடம் கொண்டுவந்தார். தனாவிற்கு நன்றி. விஜய் ஆண்டனி சாருடன் பல காலமாக இணைந்து நடிக்க ஆசைப்பட்டேன். இப்படத்தில் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. மக்களை அடிமைக்குள்ளாக்கினான் ஹிட்லர். இந்த  ஹிட்லர் மக்களின் நன்மைக்காக அதிகாரத்தை கையில் எடுத்துள்ளான்.”
நடிகர், இயக்குநர் தமிழ் பேசியதாவது:-
‘ஹிட்லர்’ என்ற மிக அழுத்தமான தலைப்பு இந்தப்படத்திற்கு கிடைத்துள்ளது. தயாரிப்பாளர் ஒரு படம் முடிந்த பிறகு எல்லோருக்கும் நன்றி சொல்வது மகிழ்ச்சியாக இருக்கிறது. இயக்குநர் தனா 24 மணி நேரமும் இந்த படத்திற்காக மட்டுமே உழைத்துக் கொண்டே இருப்பார். எப்போதும் இதே சிந்தனை தான். இந்தப் படத்தில் அவருடன் பணிபுரிந்தது சிறப்பான அனுபவமாக இருந்தது. பார்வையாளர்களுக்கும் இந்தப்படம் நல்ல அனுபவம் தரும் நன்றி.
நடிகை ரியா சுமன் பேசியதாவது-
எனக்கு இந்தப் படம் மிக முக்கியமான படம். இயக்குநர் தனா, மணி சார் ஸ்கூலிலிருந்து வந்துள்ளார். எல்லா மணிரத்னம் படங்கள் போல இந்தப்படத்தில் தனா சார் எனக்கு மிக முக்கியமான ரோல் தந்துள்ளார். மிகச்சிறப்பான அனுபவமாக இருந்தது. விஜய் ஆண்டனி மிகச்சிறந்த மனிதர். அவர் கோபப்பட்டு நான் பார்த்ததே இல்லை. அவரிடம் நிறைய கற்றுக்கொண்டேன். இந்தப் படம் உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் .
இயக்குநர் தனா பேசியதாவது:-
“இந்த படத்தில் நன்றி என ஆரம்பித்தால் 500 பேருக்கும் மேல் நன்றி சொல்ல வேண்டும். அத்தனை பேரின் பங்கும் இருக்கிறது. என்னை நம்பி தயாரித்த ராஜா சார், என் கதையில் நடிக்க வந்த விஜய் ஆண்டனி சாருக்கு நன்றி. இந்த படத்தில் மிகச் சிறந்த நடிகர் பட்டாளம் எனக்குக் கிடைத்தார்கள். அவர்களால்தான் இந்தப்படம் சாத்தியமானது. கௌதம் மேனன் சார், விஜய் ஆண்டனி சார் என எல்லோருமே அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளனர். இந்தப்படம் முன்பே வந்திருக்க வேண்டியது. விஜய் ஆண்டனி சாருக்கு நடந்த எதிர்பாராத ஆக்ஸிடெண்ட் படத்தைத் தாமதமாக்கியது. அந்த ஆக்ஸிடெண்ட் நடந்து அவர் எங்களுக்காக விரைவாக எழுந்து வந்தார். அவரது அர்ப்பணிப்பு வியப்பானது. அவருக்கு என்றென்றும் நன்றி. இந்த இடத்தில் என் ஒளிப்பதிவாளர் நவீன்குமாருக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். அவரது உழைப்பு அபாரமானது. படத்தின் மியூசிக் விவேக்,மெர்வின். நாங்கள் மிக நட்பாக எல்லாவற்றையும் பேசிக்கொள்வோம். படத்திற்காக என்ன செய்யலாம் என என்னுடன் பேசிப் பேசி, எல்லாவற்றையும் செய்வார்கள். இசை மிக அற்புதமாக வந்துள்ளது. அவர்களுக்கு நன்றி. சங்கத்தமிழன், மணிரத்னம் சார் படத்திலிருந்தே தெரியும். அவருடன் மிக நட்பாகப் பழகுவேன். எனக்காக இறங்கி வேலை செய்வார் அவருக்கு நன்றி. ரியா சுமனுக்கு பதிலாக முதலில் வேறு ஒரு ஹீரோயின் தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் படத்தின் ஷூட்டிங்கிற்கு இரண்டு நாட்கள் முன்னால் அவரால் நடிக்க முடியவில்லை. அந்த நேரத்தில் எங்களுக்காக வந்தவர் தான் ரியா சுமன், மிகச்சிறந்த நடிகை. ரொம்பவும் புரபஷலானவர். நன்றாக நடித்துள்ளார். “ஹிட்லர்” எனது முந்தைய படங்களிலிருந்து மாறுபட்ட படம். ஒரு ஆக்சன் திரில்லர் படம். படத்தைப் பார்த்த போது எங்களுக்கு நிறைவாக இருந்தது அதை நீங்களும் உணர்வீர்கள் என்று நம்புகிறேன்.”
நடிகர் விஜய் ஆண்டனி பேசியதாவது:-
“இயக்குநர் தனாவின் வானம் கொட்டட்டும் படத்திற்கு மிகப்பெரிய ஃபேன். நானும் ராஜா சாரும் யாரை வைத்து அடுத்த படம் எடுக்கலாம் என்றபோது இருவரிடமும் வந்த பெயர் தனா. குறைந்த காலத்தில் ஒரு அழகான அவுட்புட்டை தந்துள்ளார். அவர் இன்னும் உயரம் செல்வார். ரெடின் கிங்ஸ்லி திரையில் வேறொரு நடிகராக காமெடியில் அசத்துகிறார். ரியா சுமனுக்கு இவ்வளவு தமிழ் தெரியுமென்பதே தெரியாது. வெரி ஸ்வீட், சிம்பிள் மிகச் சிறந்த நடிகை. டாணாக்காரன் தமிழ், கௌதம் மேனன் இருவருடனும் நடித்தது மகிழ்ச்சி. விவேக் பிரசன்னா நடிப்பு மிகவும் பிடிக்கும் அவருக்கும் வாழ்த்துக்கள். விவேக், மெர்வின் இருவரும் அருமையான இசையைத் தந்துள்ளனர். ஆக்ஸிடெண்டுக்குப் பிறகு என்னைப் பூப்போல பார்த்துக்கொண்டார் ஸ்டண்ட் டைரக்டர் முரளி , அவர்களுக்கு நன்றி. ஒளிப்பதிவாளர் நவீன்குமார் என் அடுத்த படத்திற்கும் அவர் தான் கேமராமேன், சிறந்த ஒளிப்பதிவாளர். படத்தில் உழைத்த அனைவருக்கும் என் நன்றிகள்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE