என்றும் இறவா கலைப்பூங்கா இராவணன்
கலைப்பூங்கா இராவணன்… இந்த தலைமுறை சினிமா பத்திரிகையாளர்களுக்கு இந்த பெயர் பரிட்சயமற்றதாக இருக்கலாம். ஆனால் இரண்டு தலைமுறைகளை கடந்த பத்திரிகையாளராக அவர் பிரசித்தமாக இருந்த காலம் பொற்காலம். நானெல்லாம் (amalan) புதிதாக பத்திரிகை உலகில் நுழைந்தபோது தனது அனுபவங்களை பல சந்தர்ப்பங்களில் பகிர்ந்துகொண்ட முன்னோடி. சினிமா பத்திரிகை உலகில் ஓர் ஆலமரமாக இருந்தவர்தான் ஐயா இராவணன் அவர்கள். அவரது பெயருடன் கலைப்பூங்கா என்ற அவரது பத்திரிகை பெயரும் ஒட்டிக்கொண்டது அவரது அயராத உழைப்புக்கும் உண்மைக்கும் உதாரணம்.
பேரறிங்கர் அண்ணா, எம்ஜிஆர், சிவாஜி, ஜெயலலிதா என்று பல ஆளுமைகளுடன் நட்பிலும் தொடர்பிலும் இருந்த ஜாம்பவான். கடந்த சில வாரங்களுக்கு முன் உடல்நலம் குன்றி தனது சுவாசத்தை நிறுத்திக்கொண்ட இராவணன் என்ற ஆலமரம் என்றும் இறவா கலைப்பூங்கா இராவணனாக நம்பில் இருப்பார்.
அவர் தொடர்பான குறிப்புகள் உங்கள் பார்வைக்காக இங்கே….
பெயர்:- டி.என்.இராவணன்
வயது 90 (28-06-1933)
தாய்: தனலட்சுமி, தந்தை: டி.பி.நடேசன்
தும்பூர் கிராமம், தேவிகாபுரம், திருவண்ணாமலை மாவட்டம்.
படிப்பு : இண்டர்மீடியட் (லயோலா கல்லூரி, நுங்கம்பாக்கம், சென்னை)
பள்ளி மாணவர் பருவ காலத்திலே குழந்தைக்கவிஞர் அமரர் அழ.வள்ளியப்பா எழுத்துலகில் அறிமுகப்படுத்திய தொடர்பால் பிரவேசித்தார். அன்று முதல் 2022 வரை பத்திரிகையாளராக 72 ஆண்டுகளாக தொடர்ந்து பணியாற்றி வந்தார்.
கலைப்பிரிவின் அனுபவ விவரங்கள்:-
முயல் – கையெழுத்துப் பிரதி, சந்திரஒளி – சிறுவர் இதழ், மான்- சிறுவர் பத்திரிகை, அஞ்சுகம் – மாத இதழ், சிறுவர் சினிமா – மாத இதழ், தேன் நிலா மாத இதழ், தினச்செய்தி – நாளேடு, அண்ணா – வார ஏடு, கலைப்பூங்கா – மாத இதழ், நாவல் எக்ஸ்பிரஸ் – மாத இதழ், போலீஸ் டைரி – மாத இதழ், சஸ்பென்ஸ் – மாத இதழ், உங்கள் மேகலா – மாத இதழ், உங்கள் எதிர்கால விதி – மாத இதழ்.
பத்திரிகைத்துறையில் ஆர்வமும், ஈடுபாடும் :-
;பேரறிஞர் அண்ணா அவர்களின் எழுத்தாற்றலாலும், பேச்சாற்றலாலும், அவரது பகுத்தறிவு கொள்கை முழக்கங்களின் தேனிசைக் குரலால் ஈர்க்கப்பட்டு பேரறிஞர் அண்ணாவின் ஒப்புதலோடு கலைஞர் கருணாநிதி மற்றும் நாவலர் நெடுஞ்செழியன் அவர்களின் வாழ்த்துக்களோடு, ‘அண்ணா” என்ற தி.மு.கழக ஆதரவு வார ஏடு பத்து காசு விலையில் துவக்கி நடத்;தி வந்தார்.
அதே சமயம், ‘அண்ணா” வார ஏட்டில் கழக செய்திகளோடு தமிழ் சினிமா சம்பந்தப்பட்ட செய்திகளையும் இணைத்து தொடர்ந்து வெளியிட்டு வந்தார். அதனால் தமிழ் சினிமாவின் பிரபலங்கள் பலரது அறிமுகமும், தொடர்பும் கிட்டியதால் ‘கலைப்பூங்கா” என்ற சினிமா பத்திரிகையை மாதமிருமுறை இதழாக 12 காசு விலையில் தினசரி நாளேடு அளவில் ஆரம்பித்து நடத்தி வந்தார்.
காலபோக்கில் தமிழ் சினிமா உலகமும், அச்சுத்துறையும் பல மாற்றங்களையும், ஏற்றங்களையும் கண்டு, நாளுக்கு நாள் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டபடியால் ஆப்செட் அச்சகத்தில் அச்சடித்து வண்ண முகப்புக் கொண்ட மாத இதழாக கலைப்பூங்கா உருமாறியது.
தமிழ் சினிமா உலகில் திரைப்படம் சம்பந்தப்பட்ட பல துறைகளிலும் ஈடுபாடும், அனுபவமும் கிடைத்து வருவதால் கலைப்பூங்கா இதழில் புத்தம் புதிய அம்சங்களையும், தனிமுத்திரை பதித்து, சுவையான செய்திகளையும் திரட்டி, விறுப்பு வெறுப்பின்றி நடுநிலையோடு புதுமை நிறைந்த பகுதிகளையும் நறுமணம் புகழ்மணக்கும் பத்திரிகையாக கலைப்பூங்காவை கடந்த 65 ஆண்டுகளாக வெளியிட்டு வந்தார். தற்போது கலைப்பூங்கா நவீன யுகத்தின் புதிய பரிணாமத்தின் வெளிப்பாடு தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக டிஜிட்டல் மீடியாவாக மாற்றி றறற.மயடயipழழபெய.நெவ என்ற இணையதளமாக செயல்பட்டு வருகிறது. இத்தகைய திரையுலக செய்திகள் கலைப்பூங்காவின் வளர்ச்சிக்கு பெரும் உறுதுணையாக இருந்து வருகிறது.
திரைப்படங்களின் சிறப்பு மலர்கள் வெளீயிடுகள்:-
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் நாடோடி மன்னன், நாடோடி மன்னன் வெற்றிவிழா, பெரிய இடத்துப் பெண், கொடுத்து வைத்தவள், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கட்டபொம்மன், வசந்த மாளிகை.
கலைஞர் சிறப்பு மலர்
இது கலைஞர் வாழும் காலம் – கலைஞர் 85 – தமிழ் சினிமா 75.
நடத்திய சிறப்பு நிகழ்ச்சிகள்
வெற்றி வாகை-கலைஞருக்கு பாராட்டு விழா
கலைஞர் கருணாநிதி அவர்கள் 1953 ஆம் ஆண்டு டால்மியாபுரம் பெயரை மாற்றி கல்லக்குடி பழங்காநத்தம் ரயில் நிலையம் என்று பெயர் சூட்ட வேண்டும் என்ற திமுக கழக போராட்டத்தில் கல்லக்குடி களம் கண்டு ரயில் போராட்டத்தில் கலந்துகொண்டு மாபெரும் வெற்றிக்கண்டு ஆறு மாதம் சிறை சென்று விடுதலையாகி அரியலூர் சிறையில் இருந்து வந்தபோது மாபெரும் ஊர்வலமும், மாபெரும் பொதுக்கூட்டமும் எளிய வரவேற்பாக இருந்தாலும் அதிறும் முழக்கங்கள் விண்ணிலே எதிரொலிக்கும் வகையில் சென்னை மாநகரமே ஸ்தம்பிக்கும் வகையில் சிறப்பாக இருந்தது. அன்றைய துணை மேயர் டி.வேணுகோபால் ராவ் நாயுடு அவர்கள் தலைமையில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் நாஞ்சில் கி.மனோகரன் உட்பட பல கழக முன்னணி தலைவர்கள் கலந்துக்கொண்டனர். அன்று சிறப்பாக நடத்திய கலைஞர் விழாவினை அன்றைய திமுக எழும்பூர் வட்ட கிளைக் கழகச் செயலாளரும், மாவட்ட பிரதிநிதியும் என்ற முறையில் நடத்தி வெற்றி கண்ட அவர் கழக தலைவர்களால் பாராட்டப் பெற்றோர்.
மேஜர் சுந்தர்ராஜன் 100வது பட விழா
மேஜர் சுந்தர்ராஜன் அவர்களின் நூறாவது படத்தின் சாதனையாக கலைப்பூங்கா சார்பில் திருவல்லிக்கேணி என்.கே.டி.கலா மண்டபத்தில் கலைவிழா நடத்தினார். நடிகர் திலகம் சிவாஜிகணேசன், இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் மற்றும் திரையுலகக்கலைஞர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
டைரக்டர் எஸ்.பாலசந்தர், ‘வீணை மேதை” கலைப்பூங்கா புகழாரம்
பிரபல டைரக்டர் எஸ் பாலச்சந்தர் (வீணை மேதை) அவர்களால் தமிழ்த்திரையுலகில் பல புது யுக்திகளைக் கையாண்டு புதுமை படைப்புகளாக அந்த நாள், பொம்மை, இது நிஜமா போன்ற படங்களை சகல துறைகளிலும் சிறப்புடன் மேலோங்கி மக்கள் மனதில் மாபெரும் கலைஞராக சித்தரிக்கப்பட்டார். எனவே இவருக்கு கலைப்பூங்கா ‘சர்வகலைஞர்” என்று புகழாரம் சூட்டி பெருமைப்படுத்தியது.
புரட்சிநடிகர்-புரட்சி தலைவர் மகுடம்
புரட்சி நடிகராக தமிழ் சினிமாவில் கோலோச்சி வந்த மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் துவக்கியபோது அவருக்கு புரட்சித்தலைவர் என்று மகுடம் சூட்டி முதன்முதலில் ஒரு கலையின் குரலாக கலைப்பூங்காவில் பெருமைப்படுத்தி மக்கள் மனதில் இதயங்களில் இதயக்கனியாக பிரகாசித்த புரட்சி நடிகராக இருந்த அவரை புரட்சித் தலைவராக முதன் முதலில் புகழாரம் சூட்டியது கலைப்பூங்கா சாதனை என்பது மகிழ்ச்சிக்குரியது. அதில் இவர் முதன்மையானவர் என்பது சிறப்புக்குரியது, கலைப்பூங்காவிற்கு பெருமைக்குரியது.
இன்று பிரபல இயக்குனராக இருக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர் பச்சை மண்ணாக சென்னை வந்தபோது, அவரை ‘அண்ணா” வார இதழில் புரூப் ரீடராக (பிழை திருத்துபவராக) வாய்ப்பு. பின்னர் ‘கலைப்பூங்கா’ உருவானபோது அதன் பொறுப்பு ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.
இன்று பிரபலமான நடிகர் இளையதளபதி விஜய் மெகா ஸ்டாராக உச்சம் பெற்ற அவரது புகைப்படத்தை கலைப்பூங்காவின் இணைப்பு இதழான சஸ்பென்ஸ் மாத இதழில் வண்ண முகப்பு அட்டையில் முதன் முதலாக அவரது படத்தை அறிமுகப்படுத்தியது கலைப்ப+ங்காவின் சிறப்புக்குரிய பெருமையாகும்.
‘காதல் கல்யாணம்” நாடகம் பேரறிஞர் அண்ணா தலைமையில் சென்னை எழும்பூர் மியூசியம் தியேட்டரில் நடத்தியுள்ளார்.
அமரா ஸ்டேஜ் என்ற நிறுவனத்துடன் ஒவியர் சீனிசோமுடன் இணைந்து பிரபல நடிகர் சிவகுமார், நகைச்சுவை நடிகர் ஐ.எஸ்.ஆர் நடித்த ‘அடல்ஸ் ஒன்லி” சென்னை ராஜாஅண்ணாமலை மன்றத்தில் பேரறிஞர் அண்ணாவின் தலைமையில் நடத்தியுள்ளார்.
சென்னை கோகலே ஹாலில் அறிவு வளர்ச்சி மன்றம் சார்பில் பேரறிஞர் அண்ணா சிறப்புக் கூட்டத்தை நடத்தினார். அப்போது பேரறிஞர்அண்ணா ‘அச்சம்” என்ற தலைப்பில் உரையாற்றினார். அவ்விழாவில் ஏ.கே.வேலன் காஞ்சி கல்யாணம்சுந்தரம், ஆர்.எஸ்.பாண்டியன் ஆகியோர் சிறப்பித்தனர்.
தென்னிந்திய சினிமா பத்திரிகையாளர்கள் சங்கம் துணைத் தலைவர்.
தமிழ்நாடு சிறு, நடுத்தர, பத்திரிகையாளர் சங்கம் செயலாளர்.
தமிழ் சினிமா பத்திரிகையாளர்கள் சங்கம் நிறுவனர்களில் ஒருவராக முன்னணியில் இருந்து செயல்பட்டார். இன்று கௌரவ ஆலோசகராக இருந்து வருகிறார்.
சிறந்த பத்திரிகையாளராக கிடைத்த விருதுகள்: –
வி.ஜி.பி நிறுவனம் ஆயிரம் ரூபாய் பொற்கிழி பரிசு
அமரர் வி.ஜி.பன்னீர்;தாஸ், உயர்திரு.வி.ஜி.சந்தோஷம் ஆகியோரின் வி.ஜி.பன்னீர்; தாஸ் நிறுனத்தினரால் வி.ஜி.பி. கோல்டன் பீச் வளாகத்தில் 1984 அன்று நடைபெற்ற பாராட்டு விழாவில் சால்வை அணிவித்து பாராட்டு மடலும், ஆயிரம் ரூபாய் கொண்ட பொற்கிழியும் வழங்கப்பட்டது.
தமிழ் சினிமா பத்திரிகையாளர்கள் சங்கம் வெள்ளிப்பதக்கம்
தமிழ் சினிமா பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் நடந்த விழாவில் 25 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிக் கொண்டிருக்கும் பத்திரிகையாளருக்கான பாராட்டு விழாவில் வெள்ளிப் பதக்கம், உயர்திரு.ஏவி.எம்.குமரன் அவர்களால் வழங்கப்பட்டது.
கலைமாமணி பிலிம் நியூஸ் ஆனந்தன் சிறப்புப் பரிசு
சென்னை மியூசிக் அகடாமியில் நடைபெற்ற கலைமாமணி பிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்களின் ‘நெஞ்சில் நிலைத்து நின்று நினைவை விட்டு அகலாத கவிஞர்;களின் திரைப் பாடல்கள்” தொகுப்பு வெளியீட்டு விழாவில் பழம் பெரும் மூத்த பத்திரிகையாளர் என்று பாராட்டப்பட்டு சால்வை அணிவித்து சிறிய பரிசு ஒன்றும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
பாரத் சோசியல் மற்றும் கல்சுரல் அகாடமி
பாரத் சோசியல் மற்றும் கல்சுரல் அகாடமி இணைந்து 21ஆவது பாரத் சினி அவார்ட் 2015 ஆம் ஆண்டுக்குரிய சிறப்பு விருது மாண்புமிகு முன்னாள் நீதியரசர் டி.என். வள்ளிநாயகம் அவர்களால் கௌரவிக்கப்பட்டது. தமிழ் புத்தாண்டு 2016 ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி வியாழக்கிழமை அன்று சவேரா ஹோட்டலில் நடந்த விழாவில் அளிக்கப்பட்டது.
நவீன் பைன் ஆர்ட்ஸ் – ராயல் கிளப் 2017
நவீன் பைன் ஆர்ட்ஸ் மற்றும் ராயல் கிளப் இணைந்து ஆங்கில புத்தாண்டு 2017 அன்று (01-01-2017) சர் பி.டி.தியாகராசர் ஹாலில் மாண்புமிகு முன்னாள் நீதியரசர் பாஸ்கரன் அவர்களால் 2016 -ம் ஆண்டுக்குரிய சிறப்பு விருது வழங்கப்பட்டது.
மகா பைன் ஆர்ட்ஸ்
01-01-2017 ஆண்டு ஆங்கில புத்தாண்டு அன்று 2016-ம் ஆண்டுக்கான விருது வடபழனி கோல்டன் திருமண மண்டப வளாகத்தில் நடைபெற்ற விழாவில் டாக்டர் அனுராதா ஜெயராமன் அவர்களால் கலையின் குரல் என்ற பொறிக்கப்பட்ட விருது வழங்கப்பட்டது.
தமிழ்த் தேசிய சலனப்படம் 100 – தங்கப்பதக்கம்
2017 ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் தேதி தொழிலாளர் மே தினத்தில் காமராஜர் அரங்கில் கொண்டாடப்பட்ட விழாவில் சால்வை போர்த்தி ஒரு சவரன் தங்கப் பதக்கம் அணிவித்து சான்றிதழ் வாழ்த்து மடலும் வழங்கப்பட்டது.
எம்ஜிஆர் – சிவாஜி அகடமி அவார்டு
ஏ4 எண்டர்டெயினர்ஸ் சார்பில் எம்ஜிஆர் – சிவாஜி அகடமி அவார்டு 2015- 2016 ஆம் ஆண்டிற்குரிய சிறப்பு விருதும் சால்வை அணிவித்து 1-1-2017 ஆம் ஆண்டு மாலை 6 மணி அளவில் எம்.ஆர்.சி; அரங்கில் நடைபெற்ற விழாவில் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.
திரைக்கதை சிற்பி வழங்கிய விருது
காமராஜர் அரங்கில் 15-8-2018 ஆண்டில் சுதந்திர தினத்தில் திரைக்கதை சிற்பி டைரக்டர், நடிகர் கே.பாக்யராஜ் அவர்களால் 70 ஆண்டுகள் கலையுலகில் சேவைக்கான கலைப்பூங்கா இராவணன் சிறப்பிற்கும் பெருமைக்குரியவர் என்று பாராட்டி விருது வழங்கப்பட்டது.
இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் – Indra Gandhi Centre for Atomic Research
இக்கார் பவுண்டேஷன் டே ஏப்ரல் 30, 2019 சென்னை சாஸ்திரி பவனில் உள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம், கல்பாக்கம் அலுவலகத்தில் விருது வழங்கப்பட்டது.
எம்.ஜி.ஆர், சிவாஜி அகாடமி 34வது சினி ஆவார்ட்ஸ்
வி4 எண்டர்டெய்னர்ஸ் சார்பில் எம்.ஜி.ஆர்,சிவாஜி அகாடமி 34வது சினி அவார்ட்ஸ் ஜனவரி 15, 2020 கலைவாணர் அரங்கில் ‘பெஸ்ட் ஆப் 2019, சல்யூட்டிங் தி லெஜண்ட்” என்ற விழாவில் பாராட்டப் பெற்று சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கௌரவிக்கப்பட்டார்.
[9:33 am, 09/06/2024] MANAM: