இந்தியாவின் சூப்பர் ஸ்டாரா பிரபாஸ்? : ஒரு பார்வை
பிரபாஸின் திரை தோன்றல் மற்றும் எந்த ஒரு கதாபாத்திரத்தையும் துடிப்பான இளமையுடன் ஏற்று நடித்து, ரசிகர்களை திரையரங்கத்திற்கு வரவழைப்பதில் உள்ள அவரது தெளிவான பார்வை… அவரை இந்த தேசத்தின் இதயத் துடிப்பாகவும், வெகுஜன மக்களின் அன்புக்குரியராகவும் மாற்றி இருக்கிறது. நேர்மை, உறுதி தன்மை, பேரார்வம்… ஆகியவற்றுக்கு பெயர் பெற்ற பிரபாஸ்.. திரையில் தோன்றும் தன்னுடைய கதாபாத்திரத்திற்காக, அனைத்து நிலையிலும் தன்னுடைய கடின உழைப்பையும், அர்ப்பணிப்பையும் அளித்து , உலகளாவிய அளவில் ரசிகர் பட்டாளத்தை சம்பாதித்திருக்கிறார்.
பிரபாஸின் தீவிர ரசிகர் குழு அண்மையில் ஜப்பான் நாட்டிலிருந்து ஹைதராபாத்திற்கு வருகை தந்து அவரது சமீபத்திய திரைப்படமான ‘கல்கி 2898 கிபி’ படத்தை கண்டு களித்தனர். இது அனைவரின் மனதையும் கவர்ந்தது. எளிதில் யாராலும் நம்ப இயலாத இந்த செயல்.. சூப்பர் ஸ்டாரின் உலகளாவிய ஈர்ப்பையும், உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களுடன் அவர் கொண்டிருக்கும் ஆழமான தொடர்பையும் காண்பிக்கிறது.
ஹைதராபாத்தில் உள்ள பிரசாத் மல்டிஃபிளக்ஸின் சின்னமான ‘ரெபெல்’ டிரக்கின் அருகில் மூன்று ஜப்பானிய ரசிகர்கள் நிற்கும் புகைப்படங்களை படத்தின் அதிகாரப்பூர்வமான இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ளது… ஸ்னாப்ஷாட்களில்… பிரபாஸின் கதாபாத்திரமான பைரவாவின் அனிமேஷன் பதிப்பு மற்றும் அவரது வாகனம் ஆகியவற்றைக் கொண்ட .. பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட போஸ்டரை அவர்கள் பெருமையுடன் வைத்திருக்கிறார்கள். அத்துடன் படத்தின் வெளியீட்டைக் கொண்டாடும் வகையில், ‘கல்கி 2898 கிபி படத்தின் வெளியீட்டிற்காக 27. 6 .2024 ஜப்பானிய ரசிகர்களிடமிருந்து வாழ்த்துக்கள்” என பதிவிட்டிருக்கும் போஸ்டரில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
‘சலார்’ உள்ளிட்ட அவர் நடிப்பில் தயாராகும் அடுத்தடுத்த படங்களின் வெளியீட்டிலும்.. பிரபாஸ் தொடர்ந்து அவருடைய தொழில்துறையில் புதிய அளவுகோல்களை அமைத்து வருகிறார். அவரது படங்களின் பாக்ஸ் ஆபீஸ் ஓபனிங் என்பது எப்போதுமே மிகப் பெரியதாகவும்… ட்ரெண்ட் செட்டிங்காகவும் இருக்கும். இதற்கு ‘கல்கி 2898 கிபி’ படமும் விதிவிலக்கல்ல. இந்த திரைப்படம் இந்திய சினிமாவில் அவரது மூன்றாவது மிகப்பெரிய ஓப்பனிங்கை குறிக்கிறது.
‘பாகுபலி’, ‘சலார்’, ‘கல்கி 2898 கிபி’ வரை பிரபாஸ் தன்னுடைய நட்சத்திர ஆதிக்கத்தை நிரூபித்து வருகிறார். அவருடைய உழைப்பு மற்றும் அவரது ரசிகர்கள் மீதான அர்ப்பணிப்பு, அவர் ஏற்று நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் தெளிவாக தெரிகிறது. இதுவே அவரை சமகால சினிமாவில் மிகவும் பிரபலமான மற்றும் செல்வாக்கு மிக்க நடிகர்களில் ஒருவராக உயர்த்துகிறது.
நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவான ‘கல்கி 2898 கிபி’ எனும் திரைப்படம்- ‘கிபி 2898 ஆம் ஆண்டின் அபோகலிப்டோ காலகட்டத்திற்கு பிந்தைய உலகில் அமைக்கப்பட்டது. இந்து இதிகாசமான மகாபாரதத்தை முன்மாதிரியாக கொண்டிருக்கிறது. இந்த அறிவியல் புனைவு கதை ஆக்சன் படைப்பில் பிரபாசுடன் அமிதாப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா படானி உள்ளிட்ட முன்னணி நட்சத்திர நடிகர்களும் நடித்துள்ளனர்.