திரை விமர்சனம்

சர்வதேச திரைப்பட விழாவில் ‘ஆசான்’ : இயக்குநர் இ.வி.கணேஷ்பாபுவுக்கு வரவேற்பு

கோவாவில் நடைபெற்று வரும்  55-ஆவது  இந்திய சர்வதேச திரைப்பட விழாவில்  உலகம் முழுவதிலிருந்தும்  திரைப்படங்கள், குறும்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு திரையிடப்படுகிறது. இந்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம், தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களின்  படக்குழுவை அழைத்து  மரியாதை செய்து உயரிய அங்கீகாரத்தை தருகிறது.

அந்த வகையில் தமிழகத்திலிருந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய  முழு நீள திரைப்படமான  ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’, இ.வி. கணேஷ்பாபு இயக்கிய ‘ஆசான்’ குறும்படம் மற்றும் இரண்டு குறும்படங்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு திரையிடப்பட்டது.

இதுபோல்  உலகின் அனைத்து மொழிகளிலும் இருந்தும்  படங்களை தேர்ந்தெடுத்து இந்த விழாவில் திரையிடப்படுகிறது. இந்த நிகழ்வில் ஒடிசா, ஹிமாச்சல் பிரதேஷ், தமிழ்நாடு ஆகிய   பல்வேறு மாநில நாட்டுப்புற கலைஞர்களைக் கொண்டு  இ.வி.கணேஷ்பாபுவிற்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

மேலும் வெளிநாட்டினரும், இந்திய திரைப்படக் கல்லூரி மாணவர்களுமாக  அரங்கம் நிறைந்த காட்சியாக  ‘ஆசான்’ திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீ மலைமேல் அய்யனார் மூவிஸ் சார்பில் G.வனிதா தயாரிப்பில், இ.வி.கணேஷ்பாபு இயக்கி நடித்துள்ளார். மேலும் ராமன் அப்துல்லா,தஞ்சை அமலன் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஸ்ரீகாந்த் தேவா இசையில், என்.கே.ராஜராஜன் ஒளிப்பதிவில், சுராஜ்கவி படத்தொகுப்பில்  ஆசான் உருவாகியுள்ளது. இந்திய அரசு நேரடியாக நடத்தும் ஒரே சர்வதேச திரைப்பட விழா இது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE