சினிமா செய்திகள்

படமாகிறது சந்திரபாபுவின் வாழ்க்கை

பல பிராந்திய மொழிகளில் வெற்றிப் படங்களைக் கொடுத்து தன்னை மதிப்புமிக்க தயாரிப்பு நிறுவனமாக நிலைநிறுத்தி உள்ளது குளோபல் ஒன் ஸ்டுடியோஸ். இப்போது நகைச்சுவை மேதை, நடிகர், பாடகர் சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாற்றை பயோபிக்காக எடுக்க அவரது சகோதரர் ஜவஹரிடமிருந்து பெற்றுள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மூத்த எழுத்தாளரும் இயக்குநருமான கே. ராஜேஷ்வர் எழுதிய ’JP: THE LEGEND OF CHANDRABABU’ நாவலின் உரிமையை தயாரிப்பு நிறுவனம் பெற்றுள்ளது.

சந்திரபாபு படத்திற்கான திரைக்கதை மற்றும் வசனத்தை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதுகிறார். கதையை மேலும் மேம்படுத்த, பாடலாசிரியரும் எழுத்தாளருமான மதன் கார்க்கி கூடுதல் திரைக்கதை, வசனங்கள் மற்றும் வசீகரிக்கும் பாடல் வரிகளை எழுதுகிறார். இந்தக் கூட்டணி நிச்சயம் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுக்கும்.

இந்தப் படம் சந்திரபாபுவுக்கு மறக்க முடியாத அஞ்சலியாக இருக்கும் என குளோபல் ஒன் ஸ்டுடியோஸ் உறுதியாக நம்புகிறது.

ஜியோ ஸ்டுடியோஸின், துல்கர் சல்மான் நடித்த ‘ஹே சினாமிகா’ படம் மற்றும் ‘ராமன் தேடிய சீதை’, ‘சாருலதா’, ’அலோன்’, உள்ளிட்ட திரைப்படங்களை குளோபல் ஒன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. டிஸ்னி+ ஹாட்ஸ்டாருக்கு ’கோலி சோடா- தி ரைசிங்’ வெப் தொடரையும் தயாரித்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE