திரை விமர்சனம்

குங்ஃபூ கோதாவில் குதிக்கும் ரச்சிதா : ‘எக்ஸ்ட்ரீம்’ – விமர்சனம்

இன்றும் தீரா செய்தியாக தினம் தினம் நாம் கேட்பது, படிப்பது   “பாலியல் வன் கொடுமைக்கு பெண் பலி” என்பதுதான். இந்தக் குற்றச்செயலுக்கான காரணங்கள் பல இருக்கின்றன. அதில் ஒன்றை கருவாக எடுத்துக்கொண்டு உருவாகி இருக்கிறது இந்த ‘எக்ஸ்ட்ரீம்’.

கதை..

கன்ஸ்ட்ரக்‌ஷன் நடந்துகொண்டிருக்கும் ஒரு கட்டிடத்தின் தூணில் ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்படுகிறது. அந்தப் பெண் யார்? யாரல்? எதற்காக கொலை செய்யப்பட்டார் என்ற விசாரணயில் இறங்குகிறது இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் நாகராஜ், சப் இன்ஸ்பெக்டர் ரச்சிதா தலைமையிலான டீம். இன்னொரு பக்கம் மாடர்ன் உடையிலும் மயக்கும் அழகிலும் இருக்கும் அம்ரிதாவின் காதல் டிராக். இந்த இரண்டுக்கும் முடிச்சுப்போட்டால் ‘எக்ஸ்ட்ரீம்’ ரெடி.

ரச்சிதா மகாலட்சுமி..

 

அட போலீஸ் யூனிஃபார்ம் ரச்சிதாவுக்கும் செம ஃபிட். காக்கிக்கே உரிய விறைப்பும் முறைப்புமாக கச்சிதம் காட்டியிருக்கும் ரச்சிதாவுக்கு போலீஸ் கேரக்டர்கள் இனி வண்டி கட்ட வாய்ப்பிருக்கிறது. அப்படியே தற்காப்பு கலையும் கத்துக்கிட்டா குங்ஃபூ, கராத்தே கதைகள் அமைந்தால் கோதாவில் குதித்து அடுத்த விஜயசாந்தியாகலாம்.

அம்ரிதா ஹல்தர்..

சினிமாவில் நிலைத்து நிற்க நடிப்பு மட்டும் பத்தாது என்று நன்கு தெரிந்தவராக இருக்கிறார் அம்ரிதா. அவரவர் விருப்பத்திற்கேற்ப உடை உடுத்தலாம் என ஆடை சுதந்திரம் பேசும் புரட்சி பெண்ணாக கிளர்ச்சி ஏற்படுத்தும் கேரக்டரில் அம்ரிதாவின் நடிப்பும் ‘எக்ஸ்ட்ரீம்’.

அபி நட்சத்திரா…

‘அயலி’யில் அபியின் நடிப்பை பார்த்து பாராட்டாதவர்களே இருக்கமுடியாது. அவ்வளவு திறமை கொட்டி கிடக்கிறது அபியிடம். ஆனாலும் வன் கொடுமைக்கு ஆளாக்கப்படும் பெண் பாத்திரமே அடிக்கடி இவரை தேடி வருவதும் அதை இவர் தேர்வு செய்வதும் ஏனோ?… எனினும் வழக்கம்போல நடிப்பில் ஏமாற்றவில்லை.

ராஜ்குமார் நாகராஜ்..

நடிப்புக்கு புதியவர் என்றாலும் குறையொன்றும் இல்லை… கொடுத்ததை சரியாக செய்திருக்கிறார். வாழ்த்துகள்! இன்னும் படத்தில் நிறைய கேரக்டர்கள்.

மற்றவை..

க்ரைம் த்ரில்லருக்கு பொருத்தமான ஒளிப்பதிவும், பின்னணி இசையும் மிரட்டல்! கடைசிவரை கொலையாளி யார் என்ற சஸ்பென்ஸ் – குழப்பத்தை கொண்டுவந்த திரைக்கதை படத்தின் ப்ளஸ்.

சமூகத்திற்கு தேவையான நல்ல மெசேஜை கரெக்டான டெம்போவில் ஆடியன்ஸ் பல்ஸ் அறிந்து கடத்தி இருக்கும் இயக்குநர் ராஜவேல் கிருஷ்ணாவை பாராட்டலாம்!

இன்னும் மெனக்கெட்டிருந்தால் எக்ஸ்ட்ராவாக மிரட்டி இருக்கும் இந்த ‘எக்ஸ்ட்ரீம்’.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE