நகரச்செய்திகள்

காமென் வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு ஐந்தாம் இடம்

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் எட்டாவது நாளில், இந்தியா 9 தங்கம், 8 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தம் 26 பதக்கங்களுடன் ஐந்தாம் இடத்தில் உள்ளது.

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளின் 8-வது நாளில் இந்தியா 3 தங்கம், ஒரு வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களுடன் 6 பதக்கங்களை வென்றுள்ளது. பஜ்ரங் புனியா, தீபக் புனியா, சாக்சி மாலிக் ஆகியோர் தங்கத்தையும், அன்ஷு மாலிக் வெள்ளியையும், திவ்யா காக்ரன், மொகித் கிரேவல் வெண்கலத்தையும் வென்றனர்

2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் 8-ஆம் நாளில் 3 தங்கம், 1 வெள்ளி மற்றும் 2 வெண்கலம் என 6 பதக்கங்களை வென்று இந்திய மல்யுத்தக் குழு சிறப்பாகச் செயல்பட்டது. ஆடவருக்கான ஃப்ரீஸ்டைல் 65 கிலோ மல்யுத்தப் போட்டியில் பஜ்ரங் புனியா, ஆடவர் ஃப்ரீஸ்டைல் 86 கிலோ போட்டியில் தீபக் புனியா, பெண்கள் 62 கிலோ ப்ரீஸ்டைல் போட்டியில் சாக்சி மாலிக் ஆகியோர் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர்.

பெண்களுக்கான ஃப்ரீஸ்டைல் 57 கிலோ மல்யுத்தப் போட்டியில் அன்ஷு மாலிக் வெள்ளியும், பெண்கள் ஃப்ரீஸ்டைல் 68 கிலோ போட்டியில் திவ்யா கக்ரானும், ஆண்கள் ஃப்ரீஸ்டைல் 125 கிலோ போட்டியில் மொஹித் கிரேவாலும் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

9 தங்கம், 8 வெள்ளி, 9 வெண்கலப் பதக்கங்களுடன் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் உள்ளிட்டோர் பதக்கம் வென்ற வீரர்களின் சாதனைகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

பதக்கப் பட்டியலில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகள் முதல் நான்கு இடங்களில் உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE