சினிமா செய்திகள்

‘பறந்து போ’ தரும் புது அனுபவம் : மிர்ச்சி சிவா நம்பிக்கை

எத்தனை படம் எடுக்கிறார் என்பது கணக்கல்ல எப்படியான படம் எடுக்கிறார் என்பதே ஒரு இயக்குநரின் அடையாளம். அப்படியான அடையாளத்தைக் கொண்டவர் இயக்குநர் ராம். இவரின் அடுத்த படைப்பாக வெளியாகிறது ‘பறந்து போ’.

கதையின் நாயகனாக நடித்திருக்கிறார் மிர்ச்சி சிவா. படம் பற்றி அவர் ரத்தின சுருக்கமாக பகிர்ந்துகொண்டதிலிருந்து..

“ராம் சார் என்னை படத்திற்காக அழைத்தபோது எனக்கே ஆச்சரியமாகதான் இருந்தது. தனக்கு வேண்டும் என்பதை சரியாக நடிகர்களிடம் இருந்து வாங்கிவிடக் கூடியவர் இயக்குநர் ராம். அவரது வழக்கமான ஸ்டைலில் உருவாகி இருக்கும் படமாக இது இருக்கும். நிச்சயம் படம் பார்த்துவிட்டு சிரித்த முகத்தோடும் நிறைவான மனதோடும் திரையரங்கில் இருந்து வெளியே வருவீர்கள். படம் நிச்சயம் உங்களை ஏமாற்றாது” என்றார்.

ஜியோ ஹாட்ஸ்டார் – ஜிகேஎஸ் புரொடக்‌ஷன் – செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ராம் இயக்கத்தில் ஃபீல் குட் படமான ‘பறந்து போ’ ஜூலை 4 அன்று வெளியாகிறது.

நடிகர்கள்: சிவா, கிரேஸ் ஆண்டனி, மாஸ்டர் மிதுன் ரியான், அஞ்சலி, அஜு வர்கீஸ், விஜய் யேசுதாஸ் மற்றும் பலர் இதில் நடித்துள்ளனர்.

தொழில்நுட்பக் குழு:

எழுத்து, இயக்கம்: ராம்,
ஒளிப்பதிவு: என்.கே. ஏகாம்பரம்,
படத்தொகுப்பு: மதி வி.எஸ்.,
இசை: சந்தோஷ் தயாநிதி,
பாடல் வரிகள்: மதன் கார்க்கி,
தயாரிப்பு வடிவமைப்பு: குமார் கங்கப்பன்,
சண்டைப் பயிற்சி: ஸ்டண்ட் சில்வா,
காஸ்ட்யூம்: சந்திரகாந்த் சோனாவனே,
நடன இயக்குநர்: ரிச்சி ரிச்சர்ட்சன்,
ஒலி வடிவமைப்பு: அருள் முருகன்,
ஆடியோகிராஃபர் : எம் ஆர் ராஜகிருஷ்ணன்,
கலரிஸ்ட்: ராஜசேகரன்,
விஎஃப்எக்ஸ் : கார்த்திக் கம்பேட்டன்,
ஸ்டில்ஸ் : ஜெய்குமார் வைரவன்,
ஒப்பனை : சசிகுமார் பரமசிவம், சுதி சுரேந்திரன்,
விளம்பர வடிவமைப்பு: ட்வென்டி.ஒன்.ஜி,
தயாரிப்பு: ஜியோ ஹாட்ஸ்டார், ஜிகேஎஸ் பிரதர்ஸ் புரொடக்‌ஷன், செவன் சீஸ் அண்ட் செவன் ஹில்ஸ் புரொடக்‌ஷன்ஸ்,
தயாரிப்பாளர்கள் : ராம், வி குணசேகரன், வி கருப்புசாமி, வி ஷங்கர்,
உலகளாவிய வெளியீடு: ரோமியோ பிக்சர்ஸ்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா – அப்துல் நாசர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE