சினிமா செய்திகள்

எஸ்.ஜே.சூர்யாவிடம் பாடம் பயின்ற யாஷிகா ஆனந்த்

T.R.  ரமேஷ் மற்றும் S.ஜாஹிர் ஹுசைன்  தயாரிப்பில்,  எஸ் ஜே சூர்யா, யாஷிகா ஆனந்த் நடிப்பில், இயக்குநர் வெங்கட் ராகவன் இயக்கியுள்ள படம்  ‘கடமையை செய்’. ஆகஸ்ட் 12 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது.

அப்போது நாகர் பிலிம்ஸ் தயாரிப்பாளர் ஜாகீர் ஹுசைன்  பேசியதாவது:-
இந்த படத்தை முடிக்க எனக்கு பெரிய உதவியாய் இருந்தது எஸ் ஜே சூர்யாதான். சம்பளத்தை வெகுவாக குறைத்து, பல செலவுகளை கட்டுபடுத்தி இந்த திரைப்படத்திற்காக பெரிய பங்களிப்பை கொடுத்தார்.  படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் பெரிய பங்களிப்பை கொடுத்துள்ளனர். படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது அனைவரும் ஆதரவு தாருங்கள்.” என்றார்

இயக்குனர் வெங்கட் ராகவன் பேசியபோது, “ இந்த படம் கொரோனா காலத்தில் எடுத்தோம், அப்போது பல சிக்கல்கள் எழுந்தது, அதையெல்லாம் சரி செய்து இந்த படத்தை முடித்தோம். இந்த படத்திற்காக ஒரு மருத்துவமனை செட் போட்டோம், அதற்கு தயாரிப்பாளர் மிகவும் உறுதுணையாய் இருந்தார்கள். ஒளிப்பதிவாளர் வேகமாகவும் இருப்பார், அதேநேரத்தில் சிறப்பான காட்சிகளையும் தருவார். இந்த படத்தை கோர்த்து படத்தொகுப்பாளர் ஶ்ரீகாந்த் சிறப்பான படைப்பாக தந்துள்ளார். இசையமைப்பாளர் சிறப்பாக இசையமைத்துள்ளார். படத்தில் சின்ன நடிகர்கள் கூட கவனத்தை ஈர்ப்பவர்களாக இருப்பார்கள்.  நர்ஸ் கதாபாத்திரத்திற்காக யாஷிகாவிற்கு  டெஸ்ட் சூட் செய்த போது, எங்களை ஆச்சர்யப்படுத்தினார். இந்த கதாபாத்திரத்திற்கு மிகச்சரியாக பொருந்தியுள்ளார்.  இப்படத்தை பார்ப்பவர்கள் கண்டிப்பாக யாஷிகா ஆனந்தை பாராட்டுவார்கள்.  எஸ் ஜே சூர்யா சார் அல்டிமேட் பர்பார்மர், அவர் ஒரு நடிகராக கதைக்குள் வருவார். சினிமாவுக்காக  அர்பணிப்போடு பணிபுரிபவருக்கு இப்படம் மிகப்பெரும் பாராட்டை தரும். இப்படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி.” என்றார்.

யாஷிகா ஆனந்த் பேசியதாவது :-
“பல போராட்டங்களுக்கு பிறகு இந்த திரைப்படம் தியேட்டரில் வெளியாகிறது. முதன்முதலில் இந்த படக்கதையை என்னிடம் கூற வந்த போது, என்னால் இந்த பாத்திரத்தை பண்ண முடியுமா ? என பயந்தேன். ஆனால்  இயக்குனர் என்னை சிறப்பாக நடிக்க வைத்தார். எஸ் ஜே சூர்யா சார் பண்பான மனிதர், அதோடு திறமையானவர். ஒவ்வொரு நாளும் அவருடன் பணிபுரியும் போது நிறைய சொல்லி தருவார். எனக்கு ஒரு கிளாமர் ஹீரோயின் என்ற அடையாளம் இருந்தது,  அது இந்தப்படம் மூலம் மாறும்.  இந்த படத்தில் நான் பெரிய உழைப்பை கொடுத்துள்ளேன். இனிமேல் எனக்கு  நிறைய நல்ல  படங்கள் வருமென நம்புகிறேன். ” என்றார்.

எஸ்.ஜே. சூர்யா பேசியதாவது…

“தயாரிப்பாளர் ரமேஷ் சார் மிகச்சிறந்த திறமைசாலி. இந்த படம் அவருடைய உழைப்பால் உருவான படம். இவருக்கு பக்கபலமாக இருந்தது ஜாகீர் உசேன். இயக்குனர் வெங்கட் இந்த கதையை சொல்லும் போது, இந்த கண்டெண்ட் முக்கியமான ஒன்று என என்னால் உணர முடிந்தது. என் மனதுக்கு பிடிக்காத எந்த ஒரு விசயத்தையும் நான் இதுவரை செய்ததே இல்லை.  இந்த கதை தனித்துவமான ஒன்று. இந்த படத்தில் நடிக்க வேண்டுமென தோன்றியது.  இந்த பாத்திரம் வித்தியாசமானது, ஒரு வகை கோமோவில் இருக்கும் பாத்திரம்  அமைதியாய் இருக்க வேண்டும், அதே நேரத்தில் நடிப்பை வெளிப்படுத்த வேண்டும். டப்பிங் பேசும்போது என் வாய் அசையாது தொண்டை அசைந்திருக்கும் அதற்கேற்றாற் போல் பேசினேன். இந்தப்படம் மிக வித்தியாசமான படம்.   கண்டிப்பாக இந்த படம் இந்தியில் ரீமேக் ஆகும்.” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE