மீண்டும் தயாரிப்பில் ஏவிஎம்; மிரட்ட வரும் ‘தமிழ் ராக்கர்ஸ்’
தமிழ் சினிமா உலகில் தனி சாம்ராஜ்யமாக இருந்த பட நிறுவனம் ஏவிஎம். ஒரு காலத்தில் ஆசியாவிலேயே பெரிய ஸ்டூடியோ என்ற பெருமையையும் கொண்டிருந்த ஏவிஎம், சில ஆண்டுகளாக பட தயாரிப்பில் ஈடுபடாமல் இருந்தது. நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் பட தயாரிப்பை தொடங்கியிருக்கும் ஏவிஎம், ‘தமிழ் ராக்கர்ஸ்’ என்ற வெப் தொடரை தயாரித்துள்ளது.
‘ஈரம்’ அறிவழகன் இயக்கியுள்ள இத்தொடரில் அருண்விஜய் நாயகனாகவும், நாயகிகளாக வாணிபோஜன், ஐஸ்வர்யாமேனனும் நடித்துள்ளனர். சோனி லைவ் ஓடிடி தளத்தில் வரும் 19ஆம் தேதி வெளியாகவுள்ள இத்தொடருக்கான பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது.
அப்போது தயாரிப்பாளர் அருணா குகன் பேசியதாவது:-
‘தமிழ் ராக்கர்ஸ்’ ஆழமான கதை களத்தை கொண்டது. நாங்கள் மிக தீவிரமான ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளோம். இதன் மூலம், கலை துறையினர் படும் இன்னல்கலை பல்வேறு கோணங்களில் இருந்து ஆழமாக காட்டிஉள்ளனர். தொலைநோக்கு பார்வை கொண்ட இயக்குனர் அறிவழகன் மற்றும் நடிகர் அருண் விஜய் எங்களுடன் இணைந்தது மேலும் ஒரு கூடுதல் பலத்தினை தந்ததுடன் மட்டும் இல்லாமல், மக்களுக்கு ஒரு உணர்வு பூர்வமான ஒரு பந்தத்தினை ஏற்படுத்தும் எனும் நம்பிக்கையினை ஏற்படுத்தி உள்ளது.
இயக்குனர் அறிவழகன் பேசியபோது, “பைரசி, ஹால் காபி, டோரன்ட் டவுன்லோட் போன்ற வார்த்தைகள் என்னதான் கேள்வி பட்டதாக இருந்தாலும், அதனால் கலை உலகில் ஏற்படும் வலிகள் மற்றும் வேதனைகள் உலகிற்கு தெரியாது. அதனை‘தமிழ் ராக்கர்ஸ்’ ஒரு சுவாரஸ்மான திரில்லர் மூலம் சொல்கிறது. என் எப்போதும் நம்பிகை கொண்ட அருண் விஜய் தனது ருத்ரா எனும் கதாபாத்திரத்தில் இரவு பகலாக நடித்துக்கொடுத்து பலம் சேர்த்திருக்கிறார். ” என்றார்.
அருண்விஜய் பேசியபோது, “முதல் முறையாக வெப் தொடரில் நடித்தது பெரிய அனுபவமாக இருந்தது. சமுதாயத்திற்கு தேவைப்படும் தொடராக இதனை பார்க்கிறேன். செய்தி திருட்டு என்பது காலம் காலமாக கலை உலகில் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இந்த தொடர் திரை உலகில் பைரசி எந்த அளவுக்கு ஊடுருவி உள்ளது என்பதை வெளிக்காட்டும். திறை துறையில் அனுபவம் வாய்ந்த படைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றியதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.” என்றார்.