சினிமா செய்திகள்

எழுத்தாளர் தமயந்தி இயக்குநரானார் : சாதிய வன்முறையை பேசும் ‘காயல்’!

ஜெ ஸ்டுடியோ தயாரிப்பாளர் ஜேசு சுந்தரமாறன் தயாரிப்பில் லிங்கேஷ், அனுமோல், காயத்ரி, ஸ்வாகதா, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம்  ‘காயல்’. இப்படம் மூலம் எழுத்தாளர் தமயந்தி இயக்குநராக அறிமுகமாகிறார். ஜஸ்டின் கெனன்யா இசையமைத்திருக்கும் இப்படத்தின்  இசைவெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

விழாவில் தயாரிப்பாளர் ஜேசு சுந்தரமாறன் பேசியதாவது:-

“இந்த படத்தின் கதையை நான் படித்துப்பார்த்ததும் தயாரிக்க முடிவு செய்துவிட்டேன். நான் அமெரிக்காவில் வசித்துவருவதால் கதையை நேரில் கேட்க சந்தர்ப்பம் அமையவில்லை. இயக்குநர் தமயந்தி, ஸ்கிரிப்ட் அனுப்பி வைத்திருந்தார். அதை வாசித்து முடித்ததும் இந்த படத்தை நாம் தயாரிக்கவேண்டும் என்கிற எண்ணம் ஏற்பட்டது. அப்படி துவங்கப்பட்டதுதான்  ‘காயல்’. நடிகர்கள் ,தொழில் நுட்ப கலைஞர்கள் யாரையும் நேரில் பார்த்ததில்லை. இன்றுதான் பார்க்கிறேன்.
ஒரு நல்ல கதை அதற்கான இடத்தை தானாக வந்தடையும் , இந்தக்கதையும் அப்படிப்பட ஒரு இடத்தை வந்தடைந்திருக்கிறது. இன்னும் நல்ல கதைகளை திரைப்படமாக்குவதில் ஜெ ஸ்டுடியோ தயாராக இருக்கிறது . இந்தப்படம் தமிழில் பெரும் வரவேற்ப்பை பெரும் என்று நம்புகிறேன்” என்றார்

இயக்குநர் தமயந்தி பேசியதாவது:-

“இந்தக்கதை எனது வாழ்வில் நடந்த கதைதான். சாதி வன்முறை மற்றும் பிரிவினைவாத எண்ணங்கள் ஆண்கள் பக்கம் மட்டுமே அதிகம் இருப்பதைப்போன்று திரைப்படங்களும் , படைப்புகளும் வந்திருக்கின்றன. ஆனால் உண்மையில் பெண்களிடம் மிக மிக அதிகம் இருக்கின்றது. காலங்காலமாக அதை அடுத்த தலைமுறைகளுக்கு கடத்திசெல்வதிலும் பெரும் பங்கு வகிக்கின்றனர் பெண்கள் . அப்படிப்பட்ட ஒரு பெண்ணின் கதைதான்  ‘காயல்’. இந்தக்கதை திரைப்படமாவதற்கு தயாரிப்பதற்கு முன்வந்த தயாரிப்பாளர் ஜேசு சுந்தரமாறனுக்கு எனது நன்றியும், வாழ்த்துக்களும். படத்தின் கதாநாயகன் லிங்கேஷ், அனுமோல், காயத்ரி, ஸ்வாசகா, ஐசக் , ரமேஷ் திலக் உள்ளிட்ட அனைவரும் இந்த படத்தில் சிறப்பானதொரு பாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார்கள்” என்றார்.

நடிகர் லிங்கேஷ் பேசியதாவது:-
“இந்தப்படம் மிக முக்கியமான படம் எனது கேரியரில் , கதாநாயகனாக இந்த படத்தில் ஒப்பந்தம் செய்யும்பொழுதே இந்தப்படம் என்னமாதிரியான அதிர்வலைகளை சமூகத்தில் ஏற்படுத்தும், நமது பங்களிப்பு இந்தபடத்தில் எப்படி இருக்கவேண்டும் என்பதை யோசித்து வைத்திருந்தேன். படத்தின் இயக்குனர் தமயந்தி அவர்கள் இந்தக்கதையை படமாக்க வேண்டும் என்கிற எண்ணத்தை நான் பாராட்டுகிறேன். அதுவும் அவரது சொந்த வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை சினிமாவாக்க முயற்சித்திருப்பது வரவேற்கிறேன்.
ஒரு பொறுப்பான படத்தில் நடித்த திருப்தி இருக்கிறது”

நடிகை அனுமோல் பேசியதாவது:-

“தமயந்தி இந்த கதையை எனக்கு தயாரிப்பாளர் முடிவாவதற்கு முன்னாடியே சொல்லிவிட்டார். அப்போது நான் மலையாளப்படங்களில் பிசியாக நடித்துக்கொண்டிருந்தேன். அப்போதே நான் சொல்லிவிட்டேன் இந்த படத்தில் நான் கண்டிப்பாக நடிக்கிறேன் என்று. அதன்பிறகு சொன்னதைப்போலவே படம் துவங்கும் நேரத்தில் சொன்னதுபோல நடிக்க வந்துவிட்டேன். பெரும்பாலும் படப்பிடிப்பு கடற்கரை ஒட்டிய ஊர்களில் படப்பிடிப்பு நடைபெற்றதால் எங்களுக்கு அது ஒரு புது அனுபவமாக இருந்தது. அதுவும் ஒரு பயணம் செய்யும் அனுபவத்தை தந்தது.
இந்தப்படத்தில் நான் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் மிக முக்கியமான கதாபாத்திரம் அதைவிட இப்படி பெண்களின்  மனங்களில் இருக்கும் உண்மையான இன்னொரு பக்கத்தை சொல்ல துணிந்து சொல்லியிருக்கும் இயக்குநர் தமயந்திக்கு எனது பாராட்டுக்கள்”

விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக இயக்குநர் மித்ரன் ஜவஹர், மீரா கதிரவன், டிராஸ்கிமருது, அதிஷா, இசையமைப்பாளர் ஜஸ்டின், எடிட்டர் பிரவீன், ஒளிப்பதிவாளர் கார்த்திக், நடிகை ஸ்வாதகா, நடிகர் ஐசக், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE