சினிமா செய்திகள்

துல்கர் சல்மான் தயாரிப்பில் கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்கும் படம்

துல்கர் சல்மானின் வெய்ஃபரர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஏழாவது படைப்பு,  ‘லோகா – சேப்டர் 1 : சந்திரா’ திரைப்படம், இந்த ஓணம் பண்டிகைக் கொண்டாட்டமாக திரையரங்குகளில் வெளியாகிறது. இது குறித்து படக்குழு வெளியிட்டுள்ள புதிய போஸ்டர், ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

இந்தத்திரைப்படம், இந்திய சினிமாவில் முதல் பெண் சூப்பர் ஹீரோவை அறிமுகப்படுத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க முயற்சியாகும். டொமினிக் அருண் ( Dominic Arun) எழுதி இயக்கியுள்ள இந்த சூப்பர் ஹீரோ திரைப்படத்தில், கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் நஸ்லென் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் கல்யாணி, சூப்பர் ஹீரோவாக அதிரடி அவதாரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் டீசர் வெளியானதிலிருந்து, படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மலையாள சினிமா இதுவரை காணாத புதிய உலகத்தை காட்சிப்படுத்தியிருக்கும், இந்த திரைப்படத்தினை எதிர்பார்த்து ரசிகர்களும், திரை ஆர்வலர்களும் பெரும் ஆவலோடு காத்திருக்கின்றனர். இப்படத்தில் சந்தூ சலீம் குமார் ( Chandhu Salim Kumar),அருண் குரியன் (Arun Kurian), சாந்தி பாலச்சந்திரன் ( Shanthy Balachandran) உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பல பகுதிகளாக உருவாகும் லோகா சூப்பர் ஹீரோ யுனிவர்ஸ் படங்களின் முதல் பாகம் என்பதால், ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தொழில்நுட்பக் குழு:

ஒளிப்பதிவு – நிமிஷ் ரவி
இசை – ஜேக்ஸ் பீஜாய்
எடிட்டிங் – சாமன் சகோ
நிர்வாக தயாரிப்பாளர்கள் – ஜோம் வர்கீஸ், பிபின் பெரும்பள்ளி
கூடுதல் திரைக்கதை – சாந்தி பாலச்சந்திரன்
தயாரிப்பு வடிவமைப்பு – பாங்லான்
கலை இயக்கம் – ஜிது செபாஸ்டியன்
மேக்கப் – ரோனெக்ஸ் சாவியர்
உடை வடிவமைப்பு – மெல்வி J, அர்ச்சனா ராவ்
ஸ்டில்ஸ் – ரோஹித் கே.சுரேஷ், அமல் K.சதார்
சண்டைக் காட்சிகள் – யானிக் பென்
தயாரிப்பு ஒருங்கிணைப்பு – ரினி திவாகர், வினோஷ் கையமல்
முதன்மை உதவி இயக்குநர் – சுஜித் சுரேஷ்
மக்கள் தொடர்பு – யுவராஜ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE