‘இட்லி’ கடை விழாவில் சூடான தனுஷ் : காரணம் என்ன?
தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ‘இட்லி கடை’. இப்படத்தில் நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். அக்டோபர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாநேற்று படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
விழாவில் தனுஷ் பேசியதாவது:-
“படம் 9 மணிக்கு ரிலீஸ் என்றால் 12 மணிக்கு மேலதான் ரிவ்யூஸ்லாம் வரும். ஆனால் ஒரு சில ரிவ்யூஸ் 8 மணிக்கே வரும். அப்படி வரும் ரிவ்யூஸை எல்லாம் நம்பாதீங்க.நீங்க படத்தை பார்த்துவிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க. இல்ல உங்க நண்பர்கள் படத்தைப் பார்த்து என்ன சொல்றாங்கன்னு பாருங்க.
சினிமாவை நம்பி பல பேர் இருக்காங்க. பல தொழில்கள் சினிமாவை நம்பி இருக்கு. அதனால எல்லோருடைய படமும் ஓடணும். அது உங்க கைலதான் இருக்கு.சரியான விமர்சனங்களைப் பார்த்து அப்படங்களை பார்க்கலாமா ? இல்லையான்னு ? நீங்க முடிவு பண்ணுங்க” என்று பேசியிருக்கிறார்.