சினிமா செய்திகள்

குருநாதர் மகனை வைத்து படம் தயாரிக்கும் கே.எஸ்.ரவிக்குமார்

தமிழ்த் திரையுலகில் ‘புதுவசந்தம்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகி முதல் படத்திலேயே மெகா ஹிட் கொடுத்து உதவி இயக்குனர்கள் பலரும் உருவாக காரணமாக இருந்தவர் இயக்குனர் விக்ரம். வெற்றிகரமான காதல் பட இயக்குனர்களில் முக்கியமானவராக திகழும் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா இப்போது ‘ஹிட்லிஸ்ட்’ படம் மூலம் கதாநாயகனாகிறார்.

‘தெனாலி’,  ‘கூகுள் குட்டப்பா’ படங்களுக்கு பிறகு RK Celluloids நிறுவனம் மூலம் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இப்படத்தை தயாரிக்கிறார். இவரது குருநாதர் விக்ரமன் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் சரத்குமார் முக்கிய கதாபாத்திரம் ஏற்றிருக்கும் இப்படத்தை சூர்யகதிர், கார்த்திகேயன் என்ற இரட்டை இயக்குனர்கள் இயக்குகிறார்கள். நாயகனின்  அறிமுக விழா மற்றும் படத்தின் தொடக்கவிழா சென்னையில் நடந்தது.  இந்நிகழ்வில் தயாரிப்பாளர்கள் RB சௌத்திரி, சத்யஜோதி தியாகராஜன், PL தேனப்பன் சுரேஷ் காமாட்சி, இயக்குனர்கள் எழில், கே.எஸ்.ரவிக்குமார், விக்ரமன், எஸ் ஏ சந்திரசேகர், மனோபாலா, லிங்குசாமி, ஏ ஆர் முருகதாஸ், சீனு ராமசாமி, வெற்றிமாறன், பிரபு சாலமன், பாண்டியராஜன், ஆர் கண்ணன், சரண், ரமேஷ் கண்ணா, பேரரசு, ராஜகுமாரன், நடிகை தேவயானி உட்பட பலர் கலந்துகொண்டு  வாழ்த்தினர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE