“எங்களை பார்த்தா எப்படி தெரியுது?” : மாரிசெல்வராஜுக்கு நடிகை ஆராத்யாவின் மனம் திறந்த கேள்வி!
அறிமுக இயக்குநர் ஏ. எஸ். முகுந்தன் இயக்கத்தில், நடிகர் ஆனந்தராஜ், பிக் பாஸ் சம்யுக்தா, ஆராத்யா, முனீஷ்காந்த், தீபா, சசிலயா, ராம்ஸ், ஆனந்த் பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ‘மெட்ராஸ் மாஃபியா கம்பெனி’.
இந்தப் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அந்த நிகழ்வில் நடிகை ஆராத்யா பேசிய பேச்சுதான் தீயாய் பற்றியுள்ளது. அப்படி என்ன பேசினார்? கேளுங்க…

“நான் ஒரு படத்தில் நன்றாக நடிக்கிறேன் என நீங்கள் கருதினால், அதற்குக் காரணம் என் நடிப்பு 50 சதவீதம்தான்; மீதமுள்ள 50 சதவீதம் இந்தப் படத்துக்காக உழைக்கும் அனைத்து டெக்னீஷியன்களும்தான்.
ஆனந்தராஜ் சார் கூட நடிப்பது எனக்கு ஒரு பெரிய பாக்கியம். இந்தப் படத்தில் நான் ஆங்லோ-இந்தியன் பெண் வேடத்தில் நடித்திருக்கிறேன். அவர்கள் நினைத்திருந்தால், ஹிந்தி அல்லது மலையாளம் போன்ற வேறு மொழிப் பெண்களை நடிக்க வைத்திருக்கலாம்.
ஆனால், நான் தமிழ்ப்பெண் முகச்சாயல் கொண்டிருந்தாலும், என்னை நம்பி அந்தக் கதாப்பாத்திரத்தில் நடிக்க வைத்தார்கள். கதாநாயகி என்றாலே 25 வயதுக்குள் இருக்க வேண்டும், திருமணமாகியிருக்கக்கூடாது, ஆண் நண்பர்களும் இருக்கக்கூடாது – இதெல்லாம் ஹீரோயின்களுக்கு வைத்திருக்கும் ஒரு ஸ்டீரியோடைப் என நான் கருதுகிறேன்.

