கதை திணறுகிறது; திரைக்கதை திண்டாடுகிறது… ‘சாவீ’ திரை விமர்சனம்!
மாமன் மகளை காதலிக்கும் கதாநாயகன். இந்த காதலுக்கு குறுக்கே நிற்கும் மாமன். அப்பாவின் சம்மதம் கிடைத்துவிடாதா என்று தவிக்கும் மகள். மாமனின் வெறுப்புக்கு காரணமாக ஒரு பின்னணியை விளக்கும் காட்சி முடிந்ததும் விபத்தில் பலியாகிறார் மாமன். அப்புறமென்ன காதலர்கள் ரூட்டு க்ளீயர்னு நினைக்கிறீங்களா? அதுதான் இல்லை. இறந்துபோன மாமன் உடல் காணாமல் போக.. கதிகலங்கி போகிறது உறவுகள். பிணத்தை கண்டுபிடிக்க களமிறங்குகிறது காவல் துறை. உடல் கிடைத்ததா? காதலர்கள் இணைகிறார்களா என்பதே மிச்ச கதை!
சாவு வீடு என்பதன் சுருக்கமே ’சாவீ’யாம். எப்படியெல்லாம் யோக்கிறாங்க. ஒரு தலைப்பு வைப்பதிலேயே இத்தனை வறட்சி என்றால் கதையில் மட்டும் செழிப்பு இருக்குமா என்ன? என்ன சொல்ல வருகிறார்கள் என்பதே புரியாத அளவுக்கு கதை தினறுகிறது திரைக்கதை திண்டாடுகிறது.
கதாநாயகனாக உதயா தீப் கொடுத்த வேலையை செய்திருக்கிறார். கதாநாயகி லட்சணமாக இருக்கிறார் நன்றாகவும் நடிக்கிறார். போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் ஆதேஷ் பாலா காக்கி சீருடைக்கு பொருத்தமான உடல் வாகு. ஆனால் கதாபாத்திரம்தான் கடுப்பேத்துகிறது மை லார்ட்.
அப்புறம் ஒரு டஜன் கேரக்டருக்கு மேல் படத்தில் இருக்கு. இருந்தும் என்ன பயன்?..
மீட்டருக்கு மேல் வாசித்திருக்கும் இசையமைப்பாளரும் டல் லைட்டிங் செய்திருக்கும் ஒளிப்பதிவாளரும் பட்ஜெட்டுக்கு பொருத்தமாக வேலை செய்திருக்கிறார்கள்.
இயக்குநர் பெயர் ஆண்டனி அஜித்!
‘சாவீ’ எழவு!

