சினிமா செய்திகள்

மோகன்லாலின் ‘விருஷபா’ வசூல் இவ்வளவு மோசமா?

2025ஆம் ஆண்டு மட்டும்  மோகன்லால் நான்கு படங்களில் நடித்துள்ளார்.  நான்காவது படம் ‘விருஷபா’.  டிசம்பர் 25 அன்று வெளியான இப்படத்தை நந்த கிஷோர் எழுதி இயக்கியுள்ளார்.

கதை, திரைக்கதை, மேக்கிங், தொழில்நுட்பம் என எல்லாவற்றிலும் கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளது ‘விருஷபா’. தெலுங்கு பாலகிருஷ்ணா படங்களின் மேஜிக்கையே தூக்கி சாப்பிட்டுவிட்டதாக கிண்டலுக்கும் ஆளாகியுள்ளது.

இதனால் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நத்தை வேகத்தில் நகர்ந்துகொண்டிருக்கிறது.  இந்த ஆண்டு இதற்குமுன் வெளியான மோகன்லாலின் L2: Empuraan, Thudarum, Hridayapoorvam ஆகிய படங்களைவிட மோசமான வசூலை பதிவு செய்துள்ள  ‘விருஷபா’ விமர்சன ரீதியாகவும் வாங்கிக்கட்டிக்கொண்டுள்ளது.

உலக அளவில் இதுவரை ரூ. 70 லட்சம்  வசூலை மட்டுமே எட்டியுள்ளது. மலையாளப் பதிப்பு ரூ.46 லட்சம், தெலுங்குப் பதிப்பு ரூ.13 லட்சம், இந்திப் பதிப்பு ரூ.2 லட்சம் என போட்ட முதலுக்கு மோசம் வரும் நிலையில் ‘விருஷபா’ வசூல் ஐசியூவில் ஊசலாடிக்கொண்டிருக்கிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE