‘ஜனநாயகன்’ விழாவில் விஜய் பரபரப்பு பேச்சு!
மலேசியாவிலுள்ள புக்கிட் ஜலீல் ஸ்டேடியத்தில் நடைபெற்ற ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசியதாவது:-
” தமிழ் மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதி மலேசியா. நான் சினிமாவில் நடிக்க வரும்போது சிறிய மணல் வீடு கட்டதான் விரும்பினேன். ஆனால் என்னுடைய ரசிகர்கள் பெரிய கோட்டையே கட்டிக் கொடுத்திருக்காங்க. என்னுடைய கரியரின் முதல் நாளிலிருந்து பல அவமானங்களைச் சந்தித்திருக்கேன். என்னுடைய ரசிகர்கள் எனக்காக 33 வருஷமா பலவற்றைக் கொடுத்திருக்காங்க. அடுத்த 33 வருஷத்துக்கு நான் அவங்களுக்கு அதைத் திருப்பிக் கொடுக்கப் போறேன்.
எனக்கு ஒன்னுனா தியேட்டர் வாசல்ல வந்து நிக்கிறாங்க. நாளைக்கு அவங்களுக்கு ஒன்னுனா, அவங்க வீட்ல போய் நிப்பேன்! எனக்காக அனைத்தையும் விட்டுக் கொடுத்த ரசிகர்களுக்காக நான் சினிமாவை விட்டுக் கொடுக்கிறேன். அதுக்காக நான் அவங்களுக்கு நன்றி மட்டும் சொல்லப் போறதில்ல. நன்றிக் கடனை தீர்த்துட்டுத்தான் போவேன்.” என்றார்.

