ஜனநாயகன் விழாவில் அஜித் பற்றி பேசிய விஜய்!
மலேசியாவில் இன்று நடந்த ‘ஜனநாயகன்’படவிழாவில் அஜித் பற்றி விஜய் குறிப்பிட்டு பேசியது வைரலாகி வருகிறது.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
“மலேசியாவின் தமிழ் சினிமா மார்க்கெட்டில் மிக முக்கியமானது. நம்ம நண்பர் அஜித் நடிச்ச ‘பில்லா’ படம் இங்க ஷூட் செய்ததுதான். என்னுடைய ‘காவலன்’, ‘குருவி’ படங்களை ஷூட் செய்ததும் இங்குதான். நான் அனிருத்துக்கு ‘MDS’னு பட்டம் கொடுக்கிறேன்.
அது ‘மியூசிகல் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்’. உள்ளப் போனா, உங்களுக்கு பல பாடல்களும், பின்னணி இசையும் கிடைக்கும்.” என்றவர், “மமிதா பைஜூ ‘க்யூட்’ மட்டும் கிடையாது. இந்தப் படத்திலிருந்து அவங்க குடும்பங்கள் கொண்டாடும் சிஸ்டராகவும் மாறிடுவாங்க”
இவ்வாறு அவர் பேசினார்.

