பட்டையை கிளப்பும் தனுஷ் படத்தின் டீசர்
தமிழ்த் திரையுலகில் பிரபல தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் V கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள்ள படம் ‘நானே வருவேன்’. தனுஷ் இரட்டை வேடங்களில் நடிக்கும் இப்படத்தை அவரது அண்ணன் செல்வராகவன் இயக்குகிறார்.
யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் ‘வீரா சூரா’ என்ற பாடல் இடம்பெறுகிறது. சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்ட இப்பாடல், 8 நாட்களில் 8 மில்லியன் பார்வையாளர்கள் எனும் சாதனையை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இம்மாத இறுதியில் வெளியாக இருக்கும் ‘நானே வருவேன்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னை ரோகிணி திரையரங்கில் நடந்தது. தனுஷ் ரசிகர்களின் முன்னிலையில் நடந்த விழாவில் மிகப் பிரமாண்டமான LED திரையில் டீசர் ஒளிபரப்பப்பட்டது. ‘வீரா தீரா’ பாடல் போலவே படத்தின் டீசரும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்தத் திரைப்படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.