கிளாமர் விரும்பிகளை தட்டி எழுப்பும் ‘தி பெட்’ : விமர்சனம்!
தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் நான்கு நண்பர்களுக்கு கிளுகிளுப்பாக ஒரு ட்ரிப் போகவேண்டும் என்ற ஆசை. ஆசைக்கு தீனி போட அம்சமா ஒரு பொண்ணு அமையுறாங்க. 4+1 கணக்கில் ஊட்டியில் லூட்டி அடிக்க வண்டியை கிளப்புகிறார்கள் வாலிபர்கள்.
DAY 1
காட்டேஜ் கார்டன். ஓப்பன் தி பாட்டில்.. மாதுவுக்கு முன் மதுவை தொட்டதால் மட்டையாகிறார்கள் நண்பர்கள்.
DAY 2
கார்டன். ஓப்பன் தி பாட்டில்… இம்முறை லிமிட்டை தாண்டி கால் கேர்ள் தண்ணியடிக்க அன்றைய இரவும் வேஸ்ட்.
அடுத்த நாளில் அந்த விலைமாது காணாமல் போகிறார். நண்பர்களின் ஒருவர் கொலை செய்யப்படுகிறார். அவ்வளவுதான் திரைக்கதையில் தீ பிடிக்க மிச்ச கதையை சொல்லி முடிக்கிறது ‘தி. பெட்’.

நண்பர்களில் ஹீரோ ரேஞ்சில் இருப்பவர் ஸ்ரீகாந்த் மட்டுமே. மற்றவர்கள் காமெடி பீஸ். ‘ரோஜா கூட்டம்’ ஸ்ரீகாந்த் இப்பவும் அப்படியே இருப்பது ப்ளஸ். தோற்றத்தில் இளமை ஊஞ்சலாடினாலும் நடிப்பில் மட்டும் முதிர்ச்சி வரவேயில்லை.
விலைமாதாக சிருஷ்டி டாங்கே. குடும்ப குத்துவிளக்கு போல இருப்பவருக்கு சிவப்பு விளக்கு கேரக்டர் என்னும்போது சிருஷ்டி ரசிகர்களின் இதயம் நொறுங்குகிறது.. வழக்கத்தைவிட கூடுதல் கவர்ச்சியில் கிளர்ச்சியடைய வைக்கிறார்.
நண்பர்களாக வருபவர்களில் பிளாக் பாண்டிக்கு மட்டும் கூடுதல் வாய்ப்பு. சிருஷ்டியின் செவ்வாழை கால்களை தொட்டு தழுவும் வாய்ப்புக்காகவே சம்பளத்தை விட்டுத்தந்திருக்கலாம். என்ஜாய் பாண்டி. மற்ற இரு நண்பர்களாக விஜே பப்புவும் விக்ரமும். ரியாக்ஷனே இல்லை.
படத்துக்குப் படம் எரிச்சலூட்டும் ஜான் விஜய் இதில் அடக்கி வாசித்திருப்பது ஆச்சர்யம். இன்ஸ்பெக்டராக கொலைக்கான காரணத்தை விசாரிக்கும் காட்சிகள் சிறப்பு. சிருஷ்டியின் அம்மாவாக திவ்யா. சும்மா சொல்லக்கூடாது சுண்டி இழுக்கும் லட்சணம். நடிப்பும் நன்றாகவே வருகிறது.
தாஜ்நூர் இசையில் பா‘டல்கள்’ தேறவில்லை. பின்னணி இசையும் பெரிதாக இல்லை. ஊட்டி லொகேஷன் என்பதால் ஒளிப்பதிவு ஈர்க்கிறது.
காட்டேஜ் கட்டில் ஒன்று கதை சொல்வதுபோன்ற இயக்குநர் மணிபாரதியின் ஐடியா செம. ஆனால் வழுவற்ற கதையும், நச்சுன்னு நாலு சீன் இல்லாததும் ‘தி பெட்’டை போரடிக்க வைக்கிறது.
கில்மா சீனும் வெண்ணிற ஆடை மூர்த்தி ஸ்டைல் வசனங்களையும் விரும்புபவர்களுக்கு ‘தி பெட்’ நின்று பேசும்!

