ரஜினி 173 : வெளியானது அறிவிப்பு!
கடந்த சில தினங்களுக்கு முன் ரஜினியின் 173வது படத்தை இயக்குநர் சுந்தர் சி இயக்குவதாக அறிவிப்பு வெளியாகி ரஜினி -கமல் -சுந்தர்.சி மூவரும் இணைந்த புகைப்படங்கள் வெளியான நிலையில் அந்த படத்திலிருந்து சுந்தர் சி விலகுவதாக அறிவிக்கப்பட்டது.
அப்படியென்றால் ரஜினி 173ஐ இயக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்ட நிலையில், சற்றுமுன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தை ‘டான்’ பட இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்குகிறார். சிபி சக்ரவர்த்தி, சிவகார்த்திகேயனின் அடுத்தப் படத்தை இயக்கவிருக்கிறார் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், ரஜினி படத்தை இயக்கவிருக்கிறார் என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

‘பேட்ட’, ‘தர்பார்’, ‘ஜெயிலர்’, ‘வேட்டையன்’, ‘கூலி’ படங்களைத் தொடர்ந்து ஆறாவது முறையாக ரஜினி படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் .
இது ஒரு குடும்ப கதை. அதை உறுதிப்படுத்தும் வகையில் ‘Every Hero has a Family’ என்ற கேப்ஷனுடன் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள். 2027 பொங்கல் பொங்கல் விருந்தாக தயாராகவுள்ளது ரஜினி 173

