விஜய்க்கு ஷாக் கொடுத்த செங்கோட்டையன்!
நாம ஒரு திட்டம் போட்டா அதில் திருப்பம் ஏற்பட்டு நினைத்தது ஒன்று நடந்து வேறொன்றாக முடியும். சாதாரண வாழ்க்கையிலேயே இப்படியென்றால் அரசியலில் நடக்கும் காய் நகர்த்தல்கள் நொடிக்கு நொடி திருப்பத்தை கொடுக்கும். தவெக விஷயத்திலும் அதுதான் நடந்துள்ளது.
மருது அழகு ராஜ், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் ஏற்கனவே தி.மு.க-வில் இணைந்த நிலையில் இன்று வைத்திலிங்கமும் திமுகவில் இணைந்துள்ளார். நான்குமுறை அதிமுக சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள வைத்திலிங்கத்திற்கு தஞ்சை மாவட்ட அதிமுகவினரிடையே கணிசமான செல்வாக்கு உண்டு.

இந்நிலையில் அதிமுகவுக்குள் அதிருப்தியில் உள்ளவர்களை தவெகவில் இழுக்க திட்டமிட்டிருந்தார் அக்கட்சியின் மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன். அதன்படி வைத்திலிங்கத்திடமும் பேச்சுவார்த்தை நடத்திவந்தார். தவெகவுக்குள் வைத்திலிங்கத்தை வளைத்துவிட்டால் தஞ்சை மாவட்ட தவெகவுக்கு கூடுதல் பலம் கிடைத்துவிடும் என்பதுதான் செங்கோட்டையனின் கணக்கு.
ஆனால் இதில் இரண்டு மனதாக இருந்த வைத்திலிங்கம் இன்று திமுகவில் இணைத்துக்கொண்டார். “எப்படியும் வைத்தி நம்ம பக்கம்தான் வருவார்” என்று தவெக தலைவர் விஜயிடம் செங்கோட்டையன் உறுதியாக சொன்ன வார்த்தைகள் இன்று பொய்த்துப்போனதால் விஜய்க்கு அதிருப்தி கலந்த அதிர்ச்சியை கொடுத்துள்ளார் செங்கோட்டையன்!

