சினிமா செய்திகள்

‘ஜனநாயகன்’ வழக்கில் தீர்ப்பு!

‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கை சான்றிதழ் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் தீர்ப்பு வாசித்து வருகின்றனர்.

நீதிபதிகளின் தீர்ப்பின் ஒரு பகுதி வருமாறு:-

“ ‘ஜனநாயகன்’ படத்தில் வெளிநாட்டு சக்திகள் இந்தியாவில் மதப்பிரச்சனையை ஏற்படுத்துவதுபோன்ற காட்சிகள் உள்ளன. படத்துக்கு யூ/ஏ சான்றிதழ் கொடுக்க தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. தணிக்கை வாரியத்துக்கு போதுமான கால அவகாசம் வழங்கவில்லை என்பதால் மீண்டும் தனி நீதிபதி விசாரணை நடத்த வேண்டும். தணிக்கை வாரிய வாரிய தலைவரின் முடிவுக்கு எதிராக படக்குழு மனு தாக்கல் செய்யலாம்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE