சினிமா செய்திகள்

கேள்விக் குறியான ‘ஜனநாயகன்’ ரிலீஸ்!

‘ஜனநாயகன்’ சென்சார் வழக்கை மீண்டும் தனி நீதிபதி விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதால்,  ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிப்போகிறது.

‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கை சான்றிதழ் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

அதன் விவரம் வருமாறு:-

“ ‘ஜனநாயகன்’ படத்தில் வெளிநாட்டு சக்திகள் இந்தியாவில் மதப்பிரச்சனையை ஏற்படுத்துவதுபோன்ற காட்சிகள் உள்ளன. படத்துக்கு யூ/ஏ சான்றிதழ் கொடுக்க தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. தணிக்கை வாரியத்துக்கு போதுமான கால அவகாசம் வழங்கவில்லை என்பதால் மீண்டும் தனி நீதிபதி விசாரணை நடத்த வேண்டும். தணிக்கை வாரிய வாரிய தலைவரின் முடிவுக்கு எதிராக படக்குழு மனு தாக்கல் செய்யலாம்.”

நீதிபதிகளின் உத்தரவை தொடர்ந்து தனி நீதிபதி பிடி ஆஷா மீண்டும் இந்த வழக்கை விசாரிக்க உள்ளார். வழக்கை விசாரித்து மறு தணிக்கை செய்ய உத்தரவிட்டாலும் தணிக்கை சான்றிதழ் வழங்க குறைந்தது இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகலாம். தவிர தணிக்கை வாரியம் மீண்டும் மேல் முறையீட்டுக்கு செல்லும் வாய்ப்பும் இருக்கிறது.

எப்படி பார்த்தாலும்   ‘ஜனநாயகன்’ ரிலீஸ் இப்போதைக்கு கேள்விக் குறிதான்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE