பார்த்திபன் பேரழகன் ஆன தருணம்!
நேர்மையும் உண்மையும் என்ன விலை என்று கேட்கக்கூடிய இந்த காலத்தில் தூய்மை பணியின்போது
கீழே கிடந்த 45 சவரன் தங்க நகைகளை எந்த சஞ்சலமும் இல்லாமல் அதன் உரியவருக்கு போய்ச்சேரும் பெருங்காரியத்தை நிகழ்த்திய தூய்மை பணியாளர் பத்மா அவர்களின் செயல் நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும் தந்த நிகழ்வு!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் போன்ற பிரபலங்கள் பத்மாவை அழைத்து பாராட்டியுள்ள நிலையில் அதன் தொடர்ச்சியாக இப்போது நடிகர் பார்த்திபனும் ஒரு செயலை செய்துள்ளார்.
பார்த்திபனின் எக்ஸ் பக்கத்தில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பார்த்திபன் பதிவு…
தங்கத்தின் மதிப்பு ஏற ஏற, மனிதத்தின் மரியாதை குறைந்துகொண்டே போய், ஒரு கிராம் ஒரு லட்ச ரூபாயை நெருங்கும்போது, லட்சக்கணக்கான உயிர்கள் கொல்லப்படுவது உறுதியாகிவிடும்.
வருடத்தில் 360 நாளாவது உழைக்கும் துப்புரவு பணியாளர் திருமதி பத்மா அவர்கள், குப்பையில் கிடந்த 360 கிராம் நகையை உரியவரிடம் சேர்ப்பித்து, அந்த ஒரு செயலின் மூலம் உலகமகா உன்னத மனுஷியாக அவதாரம் எடுத்திருக்கிறார்.
என்னை Chief Guest-ஆக அழைத்த எத்திராஜ் கல்லூரிக்கு, நான் வெறும் Guest-ஆகவும் Chief-ஆக திருமதி பத்மாவை அழைத்துச் சென்று, பாதணி அணிவித்து, பாத பூஜை செய்து, புடவை போர்த்தி, ‘உலக அழகி’ என்ற கிரீடம் சூட்டி நான் பேரழகன் ஆனேன்…
(வீடியோ இணைப்பு கீழே.)

