திரை விமர்சனம்

பேனாவை வயகராவில் நனைத்து நனைத்து… ‘ஸ்வீட்டி நாட்டி கிரேசி’ திரை விமர்சனம்!

டபுள் மீனிங்.. இல்லை இல்லை.. சிங்கிள் மீனிங் டயலாக்; சிரிப்புக்கு கேரண்டி என்ற வயகராவில் ஸாரி வகையறாவில் வந்திருக்கும் படம்.

நாயகன் த்ரிகுண் – நாயகி ஸ்ரீ ஜீத்தாவும் லவ்வர்ஸ். சீரியஸ் காதல் சில்மிஷ பில்டப் என்று பார்வையாளர்களுக்கு அன் லிமிட் கிளாமர் விருந்து படைத்துக்கொண்டிருக்கும் நேரத்தில் தனக்கு ஏற்கனவே கணக்கு டீச்சருடன். ஆண்டி வயசு பெண்ணுடனும் கனெக்‌ஷன்,  இருந்தது என்று காதலியிடம் உண்மையை உளறுகிறார் த்ரிகுண். இதனால் கடுப்பாகும் ஸ்ரீ ஜீத்தா, அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க த்ரிகுணை திடீர் திருமணம் செய்துகொண்டு கோத்தகிரியில் இருக்கும் தனது வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். அங்கே ஹீரோவுக்கும் ஆடியன்ஸுக்கும் காத்திருக்கிறது அதிர்ச்சி. அது என்ன? அதன்பிறகு நடக்கும் அஜால் குஜால் என்ன? என்று ஆவலுடன் கேட்பவர்கள் அவசியம் படம் பார்க்கலாம்.

கதாசிரியர் பேனாவை வயகராவில் நனைத்து நனைத்து எழுதினாரா? அல்லது யாரோ ஒரு காம மன்னனின்  அனுபவத்தை நினைத்து நினைத்து எழுதினாரா என்று யோசிக்கும் அளவுக்கு படத்தின் கதை, காட்சியமைப்புகள், உரையாடல்கள் சென்சாரில் இருந்து தப்பித்து வந்து கில்மா விரும்பிகளுக்கு விருந்து வைத்திருக்கிறது.

சிக்ஸ் பேக் வைத்து நடிப்பதுக்கூட பெரிய விஷயமில்லை. இதுபோன்ற செக்ஸ் பேக் கதையில் நடிப்பதற்கு பெருந்துணிச்சல் வேண்டும் .அப்படியொரு அசகாய சூரனாய் கத்துக்கிட்ட மொத்த வித்தையையும்  இறக்கி வைத்து கலக்கியிருக்கிறார் கதாநாயகன் த்ரிகுண். நடிப்பிலும் கிளாமரிலும் தன் பங்குக்கு கிறங்கடித்திருக்கும் ஹீரோயின் ஸ்ரீ ஜீத்தாவுக்கும் பாராட்டு ‘ஜொள்ளி’யே ஆகனும்.

கணக்கு டீச்சராக இனியா, பணக்கார அம்மாவாக  ‘சுந்தரா டிராவல்ஸ்’ ராதாவும் சற்றே பூசியிருந்தாலும் சினிமாவில் அடுத்த ‘ரவுண்ட்’ வருவதற்கான வாய்ப்பை வாரி வழங்கியிருக்கிறது அவர்களது கேரக்டர்கள். அவர்களும் வஞ்சகமில்லாமல் நடித்திருக்கிறார்கள்.

மனைவிகளிடம் கணவன்களாக வேலை செய்யும் கதாபாத்திரங்களாக தம்பி ராமையாவும், சத்யனும் அடி தூள். இவர்கள் அடிக்கும் லூட்டியில் தியேட்டரே சிரிக்கிறது. அப்புறம் டிரைவராக வரும் ஆலி, வசனத்தில் ஓட்டு ஓட்டுன்னு ஓட்டி  இடுப்பெலும்பு நோகும் அளவுக்கு சிரிக்க வைக்கிறார். ரவி மரியா, ஜாவா சுந்தரேஷனின் ஒரு நாள் கால்ஷீட்கூட வீண் போகாத அளவுக்கு இருவரது கேரக்டருக்கும் கிடைக்கிறது அப்ளாஸ்!

ஒளிப்பதி, இசை, எடிட்டிங் போன்ற டெக்னிக்கல் ஏரியாவையெல்லாம் கவனிக்க முடியாத அளவுக்கு திரைக்கதையில் காம ரேகையை கச்சிதமாக படரவிட்டு தனது இயக்கத்தால் படத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறார் இயக்குநர் ராஜசேகர் ஜி.

மொத்தத்தில் படம் நின்னு பேசும்!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE