சினிமா செய்திகள்

உலகம் முழுவதும் ட்ரெண்டான  ‘மூன்வாக்’ படப் பாடல்!

‘மூன்வாக்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஏத்து’ பாடல் இன்ஸ்டாகிராமை அதிர வைத்துள்ளது. இது ஒரு பெரிய நடன ட்ரெண்டாக மாறி, உலகம் முழுவதும் வேகமாக வைரலாகி வருகிறது.

ஆப்பிரிக்கா, ஜப்பான், அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பிரான்ஸ், ஸ்வீடன் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்த ட்ரெண்டில் உற்சாகமாக கலந்து கொண்டு, பாடலின் உணர்வை காப்பாற்றியபடி அதிக ஆற்றலுடன் ரீல்ஸ் செய்து பதிவிட்டு வருகின்றனர்.

Yethu பாடல் வெளியான இரண்டு வாரங்களிலேயே யூடியூபில் 11 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. மேலும், சர்வதேச விமர்சகர்கள் Yethu பாடலை பார்த்து ஆர்வத்துடன் கருத்து தெரிவித்து வருகின்றனர். தற்போது சமூக ஊடகங்களில் “Yethu” பாடலை கொண்டு செய்யப்பட்ட ரீல்கள் 100 மில்லியன் பார்வைகளை கடந்து படுவைரலாகி வருகிறது.

ஜனவரி 27ஆம் தேதி தொடங்கிய இந்த ட்ரெண்ட், இன்றளவும் சற்றும் குறையாமல் தொடர்ந்து வேகமெடுத்து வருகிறது. நடனக் கலைஞர்களைத் தாண்டி, இசைக்கலைஞர்கள் மற்றும் வாத்தியக்கலைஞர்களும் “Yethu” பாடலுக்கு ரீல்ஸ் செய்து அசத்தி வருகின்றனர்.

ஆப்பிரிக்காவின் பிரபலமான “Hypers Kids Africa” என்ற குழந்தைகள் இசைக்குழு “Yethu” பாடலுக்கு நடன ரீமேக் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த வைரல் அலைக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில், புகழ்பெற்ற இசையமைப்பாளர் A R ரஹ்மான், அந்த வீடியோவில் “Thank you for the love. You guys are terrific” என கமெண்ட் செய்துள்ளார். அதற்கு பதிலளித்த குழந்தைகள் குழு, “Happy to see your comment. We love you too” என்று தெரிவித்துள்ளது. இந்த தருணம் ரசிகர்கள் மற்றும்  இப்பாடலுக்கு மேலும் reels தயாரிப்பவர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி, இப்பாடல் கலாச்சாரம் தாண்டி எல்லோராலும் கொண்டாடப்படுகிறது என்பதை  உறுதிப்படுத்திருக்கிறது

“Yethu” பாடலில் நடனப்புயல் பிரபுதேவா மிகவும் கடினமான நடன அசைவுகளை எளிதாக ஆடி அசத்திய விதத்திற்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

A R Rahman அவர்களின் துள்ளலான இசையுடன் கூடிய பிரபுதேவாவின் அதிரடி நடனம், பாடலின் ஒளிப்பதிவு அமைப்பு — இவை அனைத்தும் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி இப்பாடல்  உலகமெங்கும் வைரல் லிஸ்டில் இணைந்துள்ளது.

இப்பாடலின் மீது ஈர்ப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ‘Yethu’ ஒரு உலகளாவிய நடன கீதமாக மாறி வருகிறது. தாளம், ஒற்றுமை மற்றும் எல்லைகளை தாண்டிய படைப்பாற்றலை கொண்டாடும் ஒரு திருவிழாவாக மாறியுள்ளது “Yethu” பாடல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE