முதலமைச்சருடன் செளந்தர்யா ரஜினி சந்திப்பு!
‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமா உலகில் கவனம் ஈர்த்த அபிஷன் ஜீவிந்த், ‘வித் லவ்’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்திருந்த இப்படத்தை அறிமுக இயக்குநர் மதன் இயக்கியிருந்தார். படத்தில் நாயகியாக அனஸ்வரா நடித்திருந்தார்.

பாக்ஸ் ஆபிஸில் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்ற ‘வித் லவ்’ திரைப்படம் உலகளவில் இதுவரை ரூ. 26 கோடி வசூல் செய்துள்ளது.
இந்நிலையில் படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ‘வித் லவ்’ படத்தின் தயாரிப்பாளர்கள் செளந்தர்யா ரஜினிகாந்த், மகேஷ்ராஜ் ஆகியோர் சந்தித்தனர். அப்போது முதலமைச்சர் அவர்களை வாழ்த்தி பாராட்டியுள்ளார்.

