திரை விமர்சனம்

 ‘முஸ்தபா முஸ்தபா’ திரை விமர்சனம்!

‘மீக்கு மாத்ரமே செப்தா’ (Meeku Maathrame Cheptha) என்ற தெலுங்குப் படத்தின் ரீமேக்கான இப்படத்தின் கதை இதுதான்…

தொலைக்காட்சி தொகுப்பாளரான சதீஷும் டாக்டரான மோனிகா சின்ன கொட்லாவும் காதலர்கள்.  இந்த காதலின் குறுக்கே எந்த வில்லனும் இல்லாததால் இரு வீட்டார் சம்மதத்துடன் கல்யாணத்திற்கு நாள் குறிக்கப்படுகிறது. கல்யாணத்திற்கு இரண்டே நாள் இருக்கும்போது சதீஷ், வேறொரு பெண்ணுடன் இருக்கும் அந்தரங்க வீடியோ ஒன்று இணையத்தில் வட்டமடிக்க,  ஆரம்பமாகிறது வில்லங்கம். அந்த வீடியோவை டெலிட் செய்ய சதீஷ் நடத்தும் போராட்டம் என்ன? காதலியுடன் அவருக்கு கல்யாணம் முடிந்ததா இல்லையா என்ற கேள்விகளுக்கு விடை சொல்கிறது க்ளைமாக்ஸ்.

கதாநாயகன் நான்தான் ஆனால் ஹீரோயிசம் கொஞ்சமும் இல்லை என்கிற அளவிற்கே இருக்கும் சதீஷின் கேரக்டர் காமெடியை முன்னிறுத்தியே அமைக்கப்பட்டுள்ளது. ஓரளவு அதை பூர்த்தியும் செய்துள்ளார்.

சதீஷின் நண்பராக வரும் சுரேஷ் ரவிக்கு செகண்ட் ஹீரோ கேரக்டர் என்று சொல்லலாம். காமெடி காட்சிகளில் சிரிக்க வைக்க முயற்சிக்கிறார்.

இவர்கள் தவிர கருணாகரன் புகழ், லிவிங்ஸ்டன், சாம்ஸ், பாவெல் நவநீதன், சூப்பர்குட் சுப்பிரமணி எனப் ஏகப்பட்ட முகங்கள். ஆனால், யாருக்குமே அழுத்தமான பாத்திரங்கள் இல்லை. நாயகிகளாக மோனிகா சின்னகோட்லா, மானசா சௌத்ரிக்கும் பெரிய வேலை இல்லை.

ஒரு காமெடி படத்திற்கான மீட்டரில் ஒளிப்பதிவைத் தந்திருக்கிறார் விஷ்ணு ஸ்ரீ. ஜோன்ஸ் ராபர்ட்டின் பாடல்கள் மற்றும் இசையிலும் பெரிய குறை இல்லை. படத்தை 2 மணிநேரத்திற்குள் வைத்த எடிட்டர் தினேஷ் பொன்ராஜின் முடிவு சரியானதே.

நண்பர்கள் கலாட்டா செய்யும் ஜாலியான காமெடி படத்திற்கு இந்த ஒன்லைனே போதுமானது. ஆனால், திசை தெரியாமல் எங்கெங்கோ திரைக்கதையை இழுத்துச் செல்கிறார் இயக்குநர் பிரவீன் சரவணன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE