சினிமா செய்திகள்

அப்பா தியாகராஜன் இயக்கத்தில் மகன் பிரஷாந்த் நடிக்கும் ‘ரஞ்ஜன்’

டாப் ஸ்டார் பிரஷாந்த் பிறந்த நாளை முன்னிட்டு அவரது தந்தை தியாகராஜன் இயக்கத்தில் உருவாகும் புதிய படமான ரஞ்ஜன்” படத்தின் டைட்டில் லுக் டீசர், திரைபிரபலங்கள் முன்னிலையில் இன்று கோலாகலமாக வெளியிடப்பட்டது.
இப்படத்தின் முதன்மை நாயகனாக பிரஷாந்த் நடிக்கிறார். தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் மகன் ஹரி இளம் நாயகனாக அறிமுகமாக அவருக்கு ஜோடியாக நடிகை தேவயானி மகள் பிரியங்கா நடிக்கிறார் பிரஷாந்த் பிறந்த நாள் கொண்டாட்டத்துடன் இவர்களை அறிமுகப்படுத்தும் விழாவும் இணைந்து நடந்தது.

இன்றைய விழாவில் திரையுலக பிரபலங்கள் தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு ஃபைவ் ஸ்டார் செந்தில் ஃபைவ் ஸ்டார் கல்யாண் கமல்போரா. SK சம்பத்குமார், மதியழகன், நடிகர்கள் விஷால், RK சுரேஷ் சத்யா ஆதேஷ்பாலா, மோகன்லால், சந்தோஷ்பிரபாகர், நடிகைகள் கிரண், ஆதிரா. செம்மலர் அன்னம், நடிகர் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ். இயக்குநர்கள் ஆர்.கே செல்வமணி, கே எஸ் ரவிக்குமார், சரண் வெற்றிமாறன், துரை செந்தில்குமார் ஸ்ரீகணேஷ் கணேஷ் K பாபு வினோத் கார்த்திக், கலை இயக்குனர் செந்தில் ராகவன் உட்பட பலர் கலந்து கொண்டு பிரஷாந்திற்கும் புதுமுகங்களுக்கும் வாழ்த்து தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE