சினிமா செய்திகள்

தீபாவளியை முன்னிட்டு Moviewood OTT தளத்தின் புதிய வெளியீடுகள்

புதிய திறமைகளுக்கு எப்போதும் ஒரு தளத்தை அமைத்துக் கொடுப்பதில் மூவிவுட் ஓடிடி முதன்மையில் இருப்பது சினிமா ரசிகர்கள் அனைவரும் அறிந்ததே. தெளிவு பாதையின் நீசத்தூரம், விண்வெளி பயணக்குறிப்புகள், த்வனி என பல புதிய கலைஞர்களின் படங்களை வெளியிட்டது.
தற்போது தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 21 அன்று பரணிகுமார் இயக்கத்தில்  ‘காலேஜ் டேஸ்’ & பாபு தூயவன் இயக்கத்தில் நடிகை அஸ்மிதா நடிப்பில் ‘A ஸ்டோரி’ ஆகிய  இரண்டு  வெப் சீரிஸ்-களையும், ராமகிருஷ்ணன் இயக்கத்தில் புத்தம் புதிய ப்ளாக் காமெடி படமான  ‘லொஜக் மொஜக் பஜக்’ எனும் திரைப்படத்தையும்  வெளியிடுகிறது.
1. A story
பப்பி என்கிற ஒரு விலைமாதுவின் வாழ்க்கையை பற்றிய கதைதான் இந்த வெப் சீரீஸ். விலைமாதுவாகவே இருந்தாலும் அவளும் ஒரு பெண் தானே?. அவளுக்கென்று ஆசாபாசங்கள் இருக்காதா என்ன?. அவள் சந்திக்கும் வாடிக்கையாளர்கள், அவர்களின் உலகம் என விரிகிறது இந்த பத்து எபிசோட் வெப் சீரீஸ். இது ஒரு அடல்ட் வெப் சீரிஸ் அல்ல. அடல்டுகளின் உலகத்தைப் பற்றிய வெப் சீரீஸ். இந்த வெப் சீரீஸில் பிரபல நடிகை அஸ்மிதா கதாநாயகியாய் நடித்திருக்கிறார். மேலும் பல பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். இயக்கம் பாபு தூயவன்.
2. College Days
எல்லா கல்லூரிகளிலும் ரெண்டு க்ரூப்புகள் இருக்கும். அதிலும் முக்கியமாய் இன்ஜினியரிங் கல்லூரிகளில் மெக்கானிக்கலுக்கும், எலக்ட்ரானிக்ஸுக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம் தான். அப்படியான பொருத்தம் தான் இந்த வெப் சீரீஸிலும், கலகலப்பான, துள்ளலான, இன்றைய இளைஞர்களின் வாழ்க்கையை காமெடியாய் சொல்லும் வெப் சீரீஸ் தான் இந்த காலேஜ் டேஸ். இதில் பரணிக்குமார் எழுதி இயக்கி நடித்துள்ளார். இளைஞர்களை நிச்சயம் கவரும் இந்த வெப் சீரீஸ்.
3. Lojak Mojak Pajak
வடிவேலுவின் பிரபலமான வசனம். இந்த வசனம் எப்படி நம்மை மீறி சிரிப்பை வரவழைக்குமோ அது போலவே இந்த திரைப்படமும் நம்மை சிரிக்க வைக்காமல் விடாது. இப்படம் ஒரு ப்ளாக் காமெடி. தங்கள் வாழ்க்கையை கெடுத்த முதலாளியின் பையனை கடத்த முயலும் மூன்று நண்பர்கள். அவர்கள் கடத்தினார்களா? இல்லையா? பின்பு என்ன நடந்தது என்பதுதான் கதை. ஒன்னரை மணி நேரம் நான் -ஸ்டாப் ப்ளாக் காமெடியை பார்க்க விரும்புகிறவர்கள் தவற விடக்கூடாத  திரைப்படம். இப்படம் நேரிடையாய் நமது மூவிவுட் ஓ.டி.டி தளத்தில் வெளியாகிறது.
ஒரு நாளைக்கு 27 பைசா செலவில் அளவில்லா எண்டர்டெயின்மெண்டை பெற மூவிவுட் தளத்தை டவுன்லோட் செய்யுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE