திரை விமர்சனம்

பரபரக்கும் ‘பட்டத்து அரசன்’ டிரைலர்

‘பொன்னியின் செல்வன்’ மெகா வெற்றியை தொடர்ந்து லைகா புரொடக்‌ஷன், தற்போது வரிசையாக படங்களை கைவசம் வைத்துள்ளது. அதில் சற்குணம் இயக்கத்தில் அதர்வா முரளி நடிக்கும் ‘பட்டத்து அரசன்’ படமும் ஒன்று. சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் ட்ரைய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. கபடி விளையாட்டை மையமாக கொண்ட கதை, குடும்பத்தின் வெவ்வேறு விதமான உணர்ச்சிகள், செண்டிமெண்ட்ஸ், அழகான கிராமப் பின்னணி,  ஆக்‌ஷன் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கி சூப்பர் பொழுதுபோக்கு படமாக வெளியாக இருக்கிறது.

அதர்வா முரளியின் மிரட்டல் நடிப்பு, ராஜ்கிரணுடைய இரண்டு விதமான தோற்றங்கள், புத்திசாலித்தனமான நடிகர்கள் தேர்வு மற்றும் திறமையான தொழில்நுட்பக் குழு எல்லாம் ஒன்று சேர்ந்து இந்தப் படத்தின் ட்ரைய்லரை பார்வையாளர்களிடம் கொண்டு சேர்த்துள்ளது.  வரும் 25ஆம் தேதி உலகம் முழுவதும்  ‘பட்டத்து அரசன்’ வெளியாக இருக்கிறது. அதர்வா முரளியின் ஒவ்வொரு படத்தேர்வும் அவரது நட்சத்திர அந்தஸ்தை உயர்த்தும் விதமாக அமைந்துள்ளது. அந்த வகையில், இந்தத் திரைப்படமும் அவரது திறமையையும் நட்சத்திர அந்தஸ்தை உயர்த்தும் விதமாகவும் அமையும்.

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில்  சற்குணம் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் மூலம்  நடிகை ஆஷிகா ரங்கநாத், கதாநாயகியாக அறிமுகமாகிறார். ராஜ்கிரண், ராதிகா சரத்குமார், ஆர்.கே. சுரேஷ், ராஜ் அய்யப்பா, ஜெயபிரகாஷ், சிங்கம் புலி, பால சரவணன், ஜி.எம். குமார், துரை சுதாகர், கன்னட நடிகர் ரவி காலி, தெலுங்கு சத்ரு மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE