திரை விமர்சனம்

‘அஸ்வின்ஸ்’ திரை விமர்சனம்

திக் திக் சினிமா பார்ப்பதில் தில் உள்ள ஆளா நீங்கள்? அப்போ உங்களுக்கு அல்லிமிட் விருந்து படைக்கும் ‘அஸ்வின்ஸ்’.

லண்டன் தீவில் உள்ள ஆடம்பரமான பங்களா ஒன்றில் வாழ்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளரான விமலா ராமன், அங்கிருந்த 15 ஊழியர்களை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்துக்கொள்கிறார். ஆனால் அவருடைய சடலம் மாயமாகிவிட அந்த பங்களாவில் அடுத்தடுத்து நடக்கும் அமானுஷ்யங்கள் புரியாத புதிராய் இருக்கிறது. இந்த பங்களாவையும், அதன் முழு விபரத்தையும் வீடியோ படமாக எடுத்துக் கொடுக்க கூடிய வேலைக்காக நாயகன் வசந்த் ரவி, சரஸ்வதி மேனன், முரளிதரன், உதயதீப், சிம்ரன் பரீக் ஆகிய ஐந்து பேரும் இந்தியாவில் இருந்து லண்டன் செல்கிறார்கள். அப்போது அவர்கள் எதிர்கொள்ளும் திக் திக் அனுபவங்களே கதை.

நாயகனாக நடித்திருக்கும் வசந்த் ரவி தனது திகில் அனுபவங்களை முகத்தில் பிரதிபலித்து படம் பார்ப்பவர்களுக்கும் பயத்தை கடத்துவது சிறப்பு. வசனம் அதிகம் இல்லை என்றாலும், நடிப்பில் வஞ்சனை வைக்காம்ல் அசத்துகிறார். சரஸ்வதி மேனன், முரளிதரன், உதயதீப், சிம்ரன் பரீக் ஆகியோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை தரமாக செய்திருக்கிறார்கள். பங்களாவுக்குள் மாட்டிக்கொண்டு சிக்கி தவிக்கும் அவர்களது அலறல் நெஞ்சை பதற வைக்கிறது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர் வேடத்தில் நடித்திருக்கும் விமலா ராமன் நச் தேர்வு.

ஒளிப்பதிவாளர் ஏ.எம்.எட்வின் சகே, படம் முழுவதையும் இருட்டில் படமாக்கினாலும், மிக நேர்த்தியாக காட்சிகளை கையாண்டிருக்கிறார். எந்த இடத்திலும் கிராபிக்ஸ் பயன்படுத்தாமல் கதாபாத்திரங்களின் பயத்தை மட்டுமே வைத்துக்கொண்டு படம் பார்ப்பவர்களையும் அச்சப்பட வைத்திருப்பவர், அந்த பயங்கர பங்களா அமைந்திருக்கும் தீவையும், அந்த தீவின் அதிசயத்தையும் நம் கண்களைவிட்டு மறையாத வகையில் காட்சிப்படுத்தியிருக்கிறார்.இசையமைப்பாளர் விஜய் சித்தார்த்தின் பின்னணி இசையும், சச்சின் மற்றும் ஹரி ஆகியோரது ஒலிக்கலவையும் அருமை. படத்தொகுப்பாளர் வெங்கட் ராஜன், படம் தொடங்கிய ஒரு சில நிமிடங்களிலேயே நம்மை இருக்கையில் கட்டி போடும் விதத்தில் காட்சிகளை தொகுத்திருக்கிறார்.

வழக்கமான திகில் கதை என்றாலும் கதை, திரைக்கதையை கையாண்ட விதத்தில் படம் பார்ப்பவர்களுக்கு புது அனுபவத்தை தரும் இயக்குனர் தருண் தேஜா பாராட்டுக்குரியவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE