புஷ்பா 2விலும் சமந்தா குத்தாட்டம் போடப்போறாராம்
புஷ்பா 2 படத்தின் படப்பிடிப்பு மின்னல் வேகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் புஷ்பா 2 வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. புஷ்பா தி ரைஸ் படத்தில் நடிகை சமந்தா “ஓ சொல்றியா மாமா” பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருந்தார். இந்நிலையில், இரண்டாம் பாகத்திலும் சமந்தா மீண்டும் ஒரு குத்தாட்டம் போடப் போகிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடிகை சமந்தா ஹீரோயினாக ஏகப்பட்ட படங்களில் கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார். ஆனால், முதன்முறையாக புஷ்பா படத்தில் தான் ஐட்டம் டான்ஸ் ஆடி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தி இருந்தார். புஷ்பா தி ரைஸ் படத்தில் மங்களம் சீனு நடத்தும் பார்ட்டியில் “ஓ சொல்றியா மாமா” பாடலுக்கு நடனமாடி இருந்தார் சமந்தா.
புஷ்பா தி ரூல் படத்தில் மங்களம் சீனுவுக்கு பதிலாக புஷ்பா நடத்தும் அந்த பிரம்மாண்ட பார்ட்டி நிகழ்ச்சியில் மீண்டும் ஒரு குத்தாட்ட பாடலுக்கு நடிகை சமந்தாவையே ஆட வைக்க திட்டமிட்டுள்ளாராம் இயக்குநர் சுகுமார். ஓ சொல்றியா மாமா மற்றும் புஷ்பா 2 படத்தில் வரும் குத்தாட்ட பாடல் என இரண்டுக்குமே சேர்த்து நடிகை சமந்தாவுக்கு 5 கோடி ரூபாய் வழங்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
வரும் மே மாதம் அல்லது ஜூன் மாதத்திற்குள் புஷ்பா 2 படத்திற்காக சமந்தா நடனம் ஆடும் பாடல் காட்சிகளை படமாக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறுகின்றனர். அதே போல இந்தி வெர்ஷனுக்கு பாலிவுட் நடிகை யாரையாவது நடனமாட வைக்கலாமா? அல்லது சமந்தாவின் ரீச்சே பாலிவுட் வரை சென்றிருப்பதால் அப்படியே விட்டு விடலாமா என்கிற விவாதத்தில் இயக்குநர் சுகுமார் ஈடுபட்டு வருவதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன