சினிமா செய்திகள்

அலங்கு’ படக்குழுவினரை பாராட்டிய விஜய்

தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களம் கொண்ட பல திரைப்படங்கள் வரும் வரிசையில் “அலங்கு “ திரைப்படமும் இணைந்து பல பாராட்டுகளையும், பல சினிமா நட்சத்திரங்களின் ஆதரவையும் பெற்று வருகிறது. அந்த வகையில் அலங்கு படக்குழுவினர்  நடிகர் விஜய்யை காணச் சென்றுள்ளனர்.

படத்தின் முன்னோட்டத்தை பார்த்த தளபதி விஜய் அவர்கள் படக்குழுவை வெகுவாக பாராட்டினார். மேலும் படத்தின் Release Glimpse-யும் வெளியிட்டுள்ளார்.

இத்திரைப்படத்தை DG FILM COMPANY சார்பில் D.சபரிஷ் , MAGNAS PRODUCTIONS சார்பில் சங்கமித்ரா சௌமியா அன்புமணி இருவரும் முறையே இணைந்து தயாரித்திருக்கின்றனர். SP சக்திவேல் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

இத்திரைப்படத்தில் கதையின் நாயகனாக குணாநிதி நடித்திருக்கிறார். அவர்களுடன் மலையாள நடிகர் செம்பன் வினோத் , காளிவெங்கட், சரத் அப்பானி, ஸ்ரீரேகா ஆகியோரும் நடித்துள்ளனர்.

அலங்கு திரைப்படத்தை, உலகம் முழுவதும் சக்தி பிலிம் பேக்டரி திரு.B.சக்திவேலன், வருகின்ற டிசம்பர் மாதம் 27ம் தேதி வெளியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE